இமாச்சலத்தில் கோர விபத்து... பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி
இமாச்சல் : தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையில் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இமாச்சல பிரதேச மாநிலம் ரெகோங் பியோ என்ற இடத்தில் இருந்து ராம்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது நாத்பா என்ற இடத்தில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் உருண்டு சட்லெஜ் ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலும், 3 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். 12 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் இருவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.
விபத்துக்குள்ளான பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications