Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இமாச்சல பிரதேச தேர்தலில் அசத்தல்.. 40 இடங்களில் வென்ற காங்கிரஸ்.. பாஜகவிடம் ஆட்சியை பறித்து உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை பிடித்தது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

கடந்த 2018ல் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்று இருந்தனர். பாஜகவின் ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக இருந்தார்.

 இமாச்சல் தேர்தல்

இமாச்சல் தேர்தல்

தேர்தல் நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு இந்திய தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தல் அறிவித்தது. 68 தொகுதிகளுக்கும் நவம்பர் 12ல் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 12 ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.

 75.6 சதவீத ஓட்டு பதிவு

75.6 சதவீத ஓட்டு பதிவு

மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்களாக இருந்த நிலையில் மொத்தம் 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 75.6 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.

மும்முனை போட்டி

மும்முனை போட்டி

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகள் போட்டியிட்டன. இதில் நேரடியான போட்டி என்பது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் இருந்தது. இந்த 3 கட்சிகளும் 68 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பகுஜன் சமாஜ் 53 இடங்களிலும் ராஷ்ட்ரிய தேவ்பூமி கட்சி 29 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. களத்தில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆட்சியை பிடித்த காங்கிரஸ்

ஆட்சியை பிடித்த காங்கிரஸ்

தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியை கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருகட்சியினரும் மாறிமாறி முன்னிலை வகித்தனர். இறுதியாக காங்கிரஸ் கட்சி மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்த தேர்தலில் சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்ற நிலையில் ஆம்ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

நட்சத்திர தொகுதிகள் எவை?

நட்சத்திர தொகுதிகள் எவை?

இந்த தேர்தலில் இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக இருந்த ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மாநில தலைவர் அக்னிஹோத்ரி ஹரோலி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனான காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

பொய்யாக்கப்பட்ட கருத்து கணிப்புகள்

பொய்யாக்கப்பட்ட கருத்து கணிப்புகள்

முன்னதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டு இருந்தது. ஏபிபி நியூஸ்-சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 31 முதல் 39 இடங்களிலும், காங்கிரஸ் 29 முதல் 37 இடங்களிலும், ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என கூறப்பட்டு இருந்தது. இந்தியா டிவி-மேட்ரைஸ் கருத்து கணிப்பில் பாஜக 41 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டு இருந்தது நினைவுக்கூரத்தக்கது. இதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை ஏபிபி சி-வோட்டர் நடத்தியது. இதில் ஆளும் பாஜகவுக்கு 37 முதல் 45 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸுக்கு 21 முதல் 29 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 0 முதல் 1 இடமும், பிறகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதேபோல் இந்திய டூடே -ஆக்சிஸ் -மை இந்தியாவின் கருத்து கணிப்பில் பாஜக 29 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டு இருந்தது. இந்தியா டிவி -மேட்ரிஸ் கருத்து கணிப்பில் பாஜக 38 இடங்களிலும் காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்க்ப்பட்டு இருந்தது. இருப்பினும் கருத்து கணிப்பு முடிவுகளை தாண்டி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+