ஹிமாச்சல்: தியோக் தொகுதியில் பாஜக, காங். வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய சிபிஎம்!
ஹிமாச்சலின் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராகேஷ் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார்.
சிம்லா: ஹிமாச்சலின் தியோக் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராகேஷ் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிககை இன்று நடைபெற்றது. இதில் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த தேர்தல் முடிவுகளில் ஒரு விஷேசம் என்னவென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர்தான் ராகேஷ் சின்ஹா. அவர் கடந்த 1993-ஆம் ஆண்டு சிம்லா தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார்.
இந்நிலையில் தற்போதைய தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் தியோக் தொகுதியில் போட்டியிட்டார். 24,791 வாக்குகள் பெற்று ராகேஷ் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக உறுப்பினர் ராகேஷ் வர்மா 22,808 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் தீபக் ரஹோர் 9,101 வாக்குளும் பெற்றனர்.
CPIM Politburo congratulates people of Theog, #HimachalPradesh for electing CPIM candidate Rakesh Singha. This victory reflects the faith people of Theog have reposed in the CPIM to protect their rights & work for people’s interests.#ElectionResults2017https://t.co/Iy6UkIZSU0 pic.twitter.com/GW3UZH2lBf
— CPI (M) (@cpimspeak) December 18, 2017
இந்த வெற்றி மூலம் ராகேஷ் சின்ஹா 2-ஆவது முறையாக சட்டசபை உறுப்பினராகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு தியோகி தொகுதியில் போட்டியிட்ட போது 10,000 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications