அசாம் முதல்வரானார் ஹிமாந்த பிஸ்வா சர்மா.. 2வது முறையாக பதவியேற்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு
கவுஹாத்தி: அசாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. இதையடுத்து பாஜகவின் முதல்வராக மீண்டும் ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இன்று அசாம் முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார். அவருடன் 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 64 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஒரே கட்டமாக கடந்த மாதம் தேர்தல் நடந்தது. கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 102 தொகுதிகளில் வாகை சூடியது. இந்த கூட்டணியில் பாஜக 82 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஏஜிபி மற்றும் பிஓபிஎஃப் கட்சி தலா 10 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், ஏஏஐயுடிஎப், ஆர்ஜேஆர்டி கட்சிகள் தலா 2 இடங்களிலும், ஏஐடிசி கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
அசாமில் கடந்த 2016ல் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. அதன்பிறகு 2021ல் மீண்டும் பாஜக வென்ற நிலையில் தற்போது ஹாட்ரிக் சாதனை படைத்தது. இதையடுத்து 2021 முதல் 2016 வரை முதல்வராக செயல்பட்ட ஹிமாந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்த ஹிமாந்த பிஸ்வா சர்மா இன்று 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சாரியா, அவருக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 4 பேர் அமைச்சர்களாக பதவிறே்றனர்.
இந்த பதவியேற்வு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள், பிரமுகர்கள் உள்பட பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அசாமை பொறுத்தவரை நீண்டகாலமாக காங்கிரஸ் ஆட்சி தான் நடந்து வந்தது. கடந்த 2016ல் முதல் முறையாக பாஜக வென்றது. அதன்பிறகு தற்போது 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மாநிலத்தில் முதல் முறையாக பாஜகவை சேர்ந்த ஒருவர் 2வது முறையாக முதல்வராகி உள்ளார்.
ஹிமாந்த பிஸ்வா சர்மாவிற்கு தற்போது 57 வயது ஆகிறது. இவர் அசாமின் ஜோர்ஹாட்டில் 1969 பிபரவரி 1ம் தேதி பிறநதார். அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். 2016ல் பாஜகவில் ஐக்கியமானார். ஜலுக்பாரி சட்டசபை தொகுதியில் 2001, 2006, 2011, 2016, 2021, 2026 என்று மொத்தம் 6வது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதில் முதல் 3 தேர்தல்களில் அவர் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவானார். பிறகு 2016, 2021, 2026 ஆகிய 3 தேர்தல்களில் பாஜக சார்பில் எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications