தலைநகர் டெல்லியில் இந்திக்கு "நகி"... ஆங்கில மீடியம் பள்ளிகளில் அலைமோதும் மாணவர்கள்
டெல்லி: மத்திய அரசு இந்தியை திணிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் இந்தி மீடியம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துவிட்டது. டெல்லியில் கடந்த சில ஆண்டுகளில் ஆங்கில மீடியம் பள்ளிகளில்தான் மாணவர் சேர்க்கை அலைமோதுகிறது..
தலைநகர் டெல்லியில் 2008-09ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் இந்தி மீடியம் பள்ளிகளை விட 2 மாவட்டங்களில்தான் ஆங்கில மீடியம் பள்ளிகள் அதிக இடம்பிடித்திருந்தன.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாகத் தொடங்கிவிட்டது. 2013-14ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையிலோ 3 மாவட்டங்களில்தான் மாணவர் சேர்க்கையில் இந்தி மீடியம் பள்ளிகள் அதிக இடத்தை பிடித்திருக்கிறது.
அதாவது ஆங்கில மீடியம் பள்ளிகளில் 2008-09ஆம் ஆண்டுகளில் 37% ஆக இருந்த மாணவர் சேர்க்கை என்பது 2013-14ஆம் ஆண்டில் 49% ஆக அதிகரித்துள்ளது.
ஆங்கில மீடியம் மாணவர் சேர்க்கையில் புதுடெல்லி மாவட்டம்தான் முதலிடத்தில் இருக்கிறது.
2008-09ஆம் ஆண்டில் 58.5% ஆக இருந்தது... 2013-14ஆம் ஆண்டில் 79.7% ஆக உயர்ந்துள்ளது.
அடுத்ததாக தென்மேற்கு டெல்லியில் 52.3% ஆக இருந்த மாணவர் சேர்க்கை 63.9% ஆக அதிகரித்துள்ளது.
ஆங்கில மீடியம் மாணவர்கள் சேர்க்கையானது
கிழக்கு டெல்லியில் 2008-09 ஆம் ஆண்டின் 44.6%-ல் இருந்து 2013-14ஆம் ஆண்டில் 55.6%
மேற்கு டெல்லியில் 47.5%- ல் இருந்து 51.8%
தெற்கு டெல்லியில் 35.5%-ல் இருந்து 49.5%
மத்திய டெல்லியில் 21.9%-ல் இருந்து 45.1%
வடக்கு டெல்லியில் 20.2%-ல் இருந்து 41.7%
வடமேற்கு டெல்லியில் 35.4%-ல் இருந்து 41.5%
வடகிழக்கு டெல்லியில் 21.4%-ல் இருந்து 34.9% ஆக உயர்ந்துள்ளது.
2008-09ஆம் ஆண்டு முதல் 2013-14ஆம் ஆண்டுவரையில் இந்தி மீடியம் பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையானது சுமார் 1.4 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் டெல்லியில் ஆங்கிலம் மீடியம் பள்ளிகள் சேருவோர் எண்ணிக்கை சுமார் 4.5 லட்சமாக உயர்ந்துள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்...
ஆஹா டெல்லியிலும் இந்திக்கு 'நகி'...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications