குத்தாட்டம் போடும் நடிகைகளை விலை மாதுக்கள் என அறிவிக்கணும்: இந்து மகாசபை தலைவர்
டெல்லி: படங்களில் அரைகுறை ஆடை அணிந்து குத்தாட்டம் போடும் நடிகைகளை விலைமாதுக்கள் என்று அறிவிக்க வேண்டும் என உத்தர பிரதேச மாநில இந்து மகாசபையின் பொதுச் செயலாளர் நவீன் தியாகி கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில இந்து மகாசபையின் பொதுச் செயலாளர் நவீன் தியாகி. அவர் அரைகுறை ஆடை அணிந்து குத்தாட்டம் போடும் நடிகைகளை விலைமாதுக்கள் என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாணவிகள் பள்ளிகளுக்கு ஜீன்ஸ், சட்டை அணியவும், செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
படங்களில் குத்தாட்டம் போடும் நடிகைகள், ஆடைகளை அவிழ்க்கும் நடிகைகளை விலைமாதுக்கள் என்று அறிவிக்க வேண்டும். ஆபாசமான செயல்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பெண்களை விலைமாதுக்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். அவர்கள் சமூகத்தில் அழுக்கை பரப்புகிறார்கள். இந்த விவகாரத்தை நான் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றார்.
தியாகியின் கருத்து பற்றி இந்து மகாசபையின் தேசிய தலைவர் ஸ்வாமி சக்ரபாணி கூறுகையில்,
இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. விவரங்கள் கேட்டுள்ளோம். தியாகி இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்றார்.
தியாகியின் கருத்துக்கு பெண்கள் அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications