இது மாதிரி ஊருக்கு 4 பேர் இருந்தா போதும்.. இந்தியா சீக்கிரமே வெளங்கிரும்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் 71வது பிறந்தநாளை இந்து சேனா அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கேக் வெட்டி கொண்டாடினர்.

மீள் குடியேறி மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், விசா வழங்குவதில் கெடுபிடிகளை காட்டுகிறார் என்று அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு ஆளானவர் அமெரிக்க அதிபரக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப். மக்கள் செல்வாக்கிற்கு பதில் அதிக வெறுப்புகளை சம்பாதித்த தலைவர் என்று குறுகிய காலத்திலேயே பெயர் வாங்கினார்.

இந்நிலையில் ஜூன் 14ம் தேதி அதிபர் ட்ரம்ப் 71வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் கடல் கடந்த ட்ரம்ப்பிற்கு டெல்லி ஜந்தர் மந்தரில் இந்து சேனா அமைப்பினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஒரு சிறு கூடாரம் அமைத்து அதில் ட்ரம்ப்பின் சிறு வயது படங்கள் முதல் தற்போதைய படங்கள் வரை அனைத்தும் வாங்கி வைக்கப்பட்டிருந்தன.

ட்ரம்ப்பிற்கு நெற்றியில் திலகமிட்டு கேக் வெட்டி அதை அவரது படத்திற்கு ஊட்டி மகிழ்ந்தனர் இந்து சேனா அமைப்பினர். இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவக்கைகளை மேற்கொள்வதில் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்பதாக அவர்கள் விளக்கமளிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போதும் கூட ட்ரம்ப்பின் வெற்றிக்காக யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகளை செய்தனர். கடந்த ஆண்டும் ட்ரம்ப்பின் பிறந்தநாளின் போது இவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மாதிரி ஊருக்கு 4 பேர் இருந்தா போதும் இந்தியாவை சீக்கிரமே "வல்லரசாக்கிடலாம்"!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US President Donald trumph's birthday party celebrated miles away at Delhi's Jantar Mantar by Hindu sena
Please Wait while comments are loading...