இஸ்லாத்திற்கு மாறாவிட்டால் ஆபாச வீடியோவை வெளியிடுவோம்: இந்து பெண்ணை மிரட்டிய மாமியார், மாமனார்
பாட்னா: பீகாரில் இந்து பெண்ணை மாட்டிறைச்சி சாப்பிட வைத்து இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்திய 2 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இந்து பெண் ஒருவர் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி பகுதியை சேர்ந்த முஸ்லீமான ஆசிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது மாமனார், மாமியார் அவரை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்துள்ளனர்.

மேலும் அவரை இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் இது குறித்து தனது கணவர் ஆசிப் மற்றும் அவரது குடும்பத்தார் மீது காந்தி மைதானம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது,
இஸ்லாத்திற்கு மாறுமாறு எனது கணவரும், அவரது குடும்பத்தாரும் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்தார்கள். மேலும் இஸ்லாத்தை கற்றுக் கொள்ள என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மதரஸாவில் ஒரு மாதம் தங்க வைத்தனர்.
இஸ்லாத்திற்கு மாறவில்லை என்றால் என்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக என் கணவரின் குடும்பத்தார் மிரட்டுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிப் குடும்பத்தார் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications