அஸ்ஸாமில் அட்டூழியம்... ஜெய் ஶ்ரீராம் கோஷம் போட கட்டாயப்படுத்தி முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்
பர்பேடா: அஸ்ஸாமில் இந்துத்துவா கும்பல் ஒன்று முஸ்லிம்களை ஜெய் ஶ்ரீராம் கோஷம் போட்டாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் மர்தாபாத் எனவும் கோஷங்களை எழுப்ப வேண்டும் என தாக்கி சித்ரவதை செய்துள்ளது அக்கும்பல்.
இந்துத்துவாதிகளுக்கு ஜெய் ஶ்ரீராம் கோஷம் இப்போது ஆயுதமாகிவிட்டது. தங்களை எதிர்ப்பவர்களை நோக்கி ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்பி கோபங்களை தூண்டிவிட்டு குளிர்காய்வது இந்துத்துவா அமைப்புகளின் வாடிக்கையாகிவிட்டது.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி செல்லும் இடங்களில் எல்லாம் இந்த முழக்கங்கள் வேண்டும் என்றே அவரை சீண்டுவதற்காகவே எழுப்பப்படுகின்றன. லோக்சபாவில் தமிழ் வாழ்க- பெரியார் வாழ்க என தமிழக எம்பிக்கள் முழங்கினாலும் ஜெய் ஶ்ரீராம் என பதில் முழக்கம் எழுப்புகின்றனர் பாஜகவினர்.
இதனால் ஜெய் ஶ்ரீராம் முழக்கத்தை முஸ்லிம்கள் கட்டாயம் எழுப்ப வேண்டும் எனக் கூறி பல இடங்களில் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அஸ்ஸாமில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது/
அஸ்ஸாமின் பர்பேடா பகுதியில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த முஸ்லிம்களை இந்துத்துவா கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. அவர்களைத் தாக்கி வீடியோக்கள் எடுத்ததுடன் ஜெய்ஶ்ரீராம் என கோஷம் போட சொல்லியிருக்கிறார்கள்.
அத்துடன் பாரத் மாதா கீ ஜே, பாகிஸ்தான் மர்தாபாத் ஆகிய முழக்கங்களையும் எழுப்ப வேண்டும் என கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சிறுபான்மையினரை அச்சம் கொள்ள வைக்கும் முழக்கமாக ஜெய் ஶ்ரீராம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications