"என் காதலிக்கு நாய் பிடிக்கலை.. எனவே"... முழுசா படிச்சுட்டு சிரிங்க!
ஹைதராபாத்: தனது காதலிக்கு தான் வளர்த்து வந்த நாய் பிடிக்கவில்லை என்பதால் ஒரு வினோதமான விளம்பரத்தை இன்டர்நெட்டில் கொடுத்து குசும்பு செய்துள்ளார் அவரது காதலர்.
இதுதொடர்பாக தனது நாயின் பாவம் போன்ற முகத்துடன் கூடிய படத்தைப் போட்டு அதைப் பற்றி வர்ணித்து விட்டு இப்படிப்பட்ட நாயைப் போய் வெறுக்கிறாரே என் காதலி என்றும் அவர் சொல்லியுள்ளார்.
இந்த விளம்பரம் இப்போது பேஸ்புக்கிலும் காமெடியாக வலம் வர ஆரம்பித்துள்ளது. ஜாலிக்காகவே இப்படிப்பட்ட விளம்பரத்தை அந்தக் காதலர் கொடுத்துள்ளார்.
சரி அந்த விளம்பரத்தைப் படிங்க...

என் நாயைப் பிடிக்கலை
"என் காதலிக்கு எனது நாயைப் பிடிக்கவில்லை. எனவே நீங்க, யாராவது வாங்கிக் கொள்ளத் தயாரா....

நல்ல வசதி
நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, ப்யூர்பிரெட் அவள். நான்கு வருடமாக நான் வைத்திருக்கிறேன்.

விளையாட்டுன்னா உசுரு
விளையாடப் பிடிக்கும். ஆனால் முறையாக பயிற்சி பெறவில்லை.

நீளமா முடி இருக்கும்
முடி நீளமாக இருக்கும். நன்றாக பராமரிக்க வேண்டும். விரல் நீளமாக இருக்கும். ஆனால் அதை வெட்டினால் பிடிக்காது.

பூனை பிடிக்கும்
எப்புவுமே பூனைன்னா உயிர். விலை உயர்ந்த சாப்பாடுதான் ரொம்பப் பிடிக்கும்.

உர் முகம்
நாள் முழுக்க வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தால் முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளும். அதேசமயம், நீங்கள் டயர்ட் ஆகி விட்டீர்கள் என்றால் உங்கள் அருகேயே இருந்து நன்றாகப் பார்த்துக் கொள்ளும்.

கடிக்காது.. ஆனால் நரகம்
உங்களைக் கடிக்காது. ஆனால் நரகம் போல உணர்வை ஏற்படுத்தி விடும்.

30 வயசு....!!
எனவே, யாருக்காவது விருப்பம் இருந்தால், இந்த 30 வயதுடைய, சுயநலமான.. எனது காதலியை விலைக்கு வாங்கி விடுங்களேன்... அப்பவாவது நானும் எனது நாயும் மட்டும் ஜாலியாக இருக்க முடியும்.."
அடப் பக்கி.. பப்பிக்காக.. பழகிய பப்பிம்மாவையே விற்கத் துணிஞ்சுட்டாரே இந்த தோஸ்த்து!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications