மும்பையில் பயங்கரம்... கார் விபத்தில் சிக்கிய பெண் பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்!
மும்பை: மும்பையில் நடந்த ஒரு சாலை விபத்தில் காரில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த விபத்து டிசம்பர் 8ம் தேதி காலை 6 மணிகத்கு நடந்துள்ளது.

மும்பையின் கோரேகான் பகுதியில் விபத்து நடந்துள்ளது. சம்பவத்தின்போது ஒரு பெண் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது ஒரு கார் அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பெண் காரில் சிக்கிக் கொண்டார். ஆனாலும் கார் நிற்கவில்லை. மாறாக படு வேகமாக போயுள்ளது. அந்தப் பெண்ணும் பல அடி தூரத்திற்கு காருடன் சேர்த்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதன் பின்னர்தான் அந்தப் பெண் காரிலிருந்து பிரிந்து விழுந்துள்ளார். அப்போதும் கார் நிற்கவில்லை. வேகமாக போய் விட்டது. அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டார். தொடர்நது அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய கார் அதன் டிரைவர் குறித்த விவரம் இதுவரை போலீஸாருக்குத் தெரியவில்லையாம்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications