ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் அப்துல் புர்ஹன் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர் அனந்தநாக் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு படைவீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் அப்துல் புர்ஹன் வானி (21) உள்பட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அப்துல் புர்ஹன் வானி:
அப்துல் புர்ஹன் வானி 15 வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தார். இவர் அந்த அமைப்பின் கமாண்டராக இருந்து வந்தார். சமூக வலைதளங்கள் மூலமாக படித்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஹிஸ்புல் அமைப்பிற்கு ஆள்சேர்ந்தும் வந்தார்.
போலீசரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள புர்ஹன் மீது நாசவேலையில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications