For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்டர்ஸ்டெல்லார் படத்தை விட சந்திராயன்-2க்கு செலவு கம்மிதான்.. இஸ்ரோ சாதித்தது எப்படி தெரியுமா?

சந்திராயன்-2 திட்டத்திற்கான செலவு இன்டர்ஸ்டெல்லார் படத்தின் பட்ஜெட்டை விட குறைவு என்று கூறப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்டர்ஸ்டெல்லார் படத்தை விட சந்திராயன்-2க்கு செலவு கம்மி | Oneindia Tamil

    டெல்லி: சந்திராயன்-2 திட்டத்திற்கான செலவு இன்டர்ஸ்டெல்லார் படத்தின் பட்ஜெட்டை விட குறைவு என்று கூறப்பட்டு இருக்கிறது. சந்திராயன்-1 திட்டமும் இதேபோல் குறைவான செலவில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    2014ல் கிறிஸ்தபர் நோலன் இயக்கத்தில் வந்த இன்டர்ஸ்டெல்லார் படம் அந்த வருடத்தின் அதிரிபுதி ஹிட். ஸ்பேஸ் டிராவல், டைம் டிராவல், 5வது டைமன்ஷன் என பல முக்கியமான விஷயங்களை இந்த படம் பேசியது.

    பலருக்கும் படம் புரியாததால், இயக்குனர் நோலனே பத்திரிக்கையாளர்களை கூட்டி படம் குறித்து விளக்கினார். தற்போது இண்டர்ஸ்டெல்லார் குறித்தும் சந்திராயன்-2குறித்தும் சுவாரசியமான ஒப்பீடு ஒன்று செய்யப்பட்டு இருக்கிறது.

    இன்டர்ஸ்டெல்லார் செலவு

    இன்டர்ஸ்டெல்லார் செலவு

    இன்டர்ஸ்டெல்லார் படத்தை தயாரித்து உலகம் முழுக்க வெளியிட ரூ.1,062 கோடி செலவு செய்யப்பட்டது. அந்த வருடம் முழுக்க இந்த படம் பல இடங்களில் ஓடியது. இந்தியாவிலும் மாஸ் ஹிட் ஆனது. இதன் மூலம் 4,300 கோடி வரை அந்த படம் வசூல் ஈட்டியது.

    சந்திராயன்-2 செலவு

    சந்திராயன்-2 செலவு

    சந்திராயன்-2வில் இந்த முறை உட்பக்கம் ஒரு ரோவர் இருக்கிறது. இது நிலவு மேல் ஊர்ந்து செல்லும். இதையும் சேர்த்து மொத்தமாக இதன் தயாரிப்பு செலவு 800 மட்டுமே ஆகும். 262 கோடி குறைவான செலவில் சந்திராயன்-2 உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    சந்திராயன்-1 செலவு

    சந்திராயன்-1 செலவு

    அதேபோல் சந்திராயன்-1 உருவாக்கப்பட்ட செலவும் மிகவும் குறைவாகும். இதை உருவாக்க மொத்தம் 475 கோடி செலவு ஆனது. ஆனால் அதே வருடம் வந்த கிராவிட்டி என்ற ஹாலிவுட் ஸ்பேஸ் படத்தை உருவாக்க 644 கோடி செலவு செய்யப்பட்டது.

    ரகசியம்

    ரகசியம்

    எப்படி இவ்வளவு குறைந்த செலவில் திட்டங்களை முடிக்க முடிகிறது என்று இஸ்ரோ இயக்குனர் சிவன் குறிப்பிட்டுள்ளார். அவர் ''நாங்கள் இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்போம். ஒரு ரூபாய் கூட வீணாகாமல் பார்த்துக் கொள்வோம். எல்லா பொருளையும் சரியான வகையில் பயன்படுத்துவோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    ISRO plans to send Chandrayaan-2 by this year. India's first moon mission has named as Chandrayaan-1. Initially ISRO is setting up to land its very first lunar rover by the end of OCT 2018. Hollywood film Interstellar is costlier than Chandrayaan-2 mission
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X