சிஏஏ நாட்டின் சட்டம்.. இதை அமல்படுத்துவதை தடுக்க முடியாது! உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது இந்த நாட்டின் சட்டம். இதனை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் எம்பி தொகுதிகளில் தங்களது வெற்றியை உறுதி செய்ய பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தவும், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வெல்வது குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாநில பாஜக ஐடி விங்க் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

கடந்த ஒன்பரை ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. எனவே ஆட்சிக்கு எதிரான மனோநிலை குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கும். மேற்கு வங்கத்தை பொறுத்த அளவில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இக்கட்சி, பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிறது. எனவே இந்த மாநிலத்தில் அதிகமான எம்பி சீட்களை வெல்ல பாஜக இரண்டு மடங்கு தீவிரமாக பணியாற்றி வேண்டும்.
இந்த சூழலில்தான் ஐடி விங்க் நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். அதில், "சிஏஏ குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இங்கு நான் நம்முடைய நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். சிஏஏ என்பது நாட்டின் சட்டம். அது அமல்படுப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் மமதா பானர்ஜி மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக இம்மாநிலத்தில் ஆட்சியை அமைக்க நீங்கள் போராட வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இம்மாநிலத்தில் 35க்கும் அதிகமான தொகுதிகளை வெல்லும்" என்று கூறியுள்ளார்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications