Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு.. அமித்ஷாவுக்கு வந்ததே கோபம்.. கடும் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: இந்தியா கூட்டணி கட்சியினர் வாக்கு வங்கி அரசியலுக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணி கட்சிகள் பேசுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி உள்ளிட்டோர் சனாதன தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனா போல ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

Home Minister Amit Shah Slams Udhayanidhi Stalin remarks about sanatana dharma

உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற இந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பைத் தந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள்.

சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு தான். சனாதனம் அப்படிங்கிற பெயரே சமஸ்கிருதத்துல இருக்கு. சனாதனம், சமத்துவத்துக்கும் - சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம்னா வேற ஒன்னுமில்ல. நிலையானதுனு அர்த்தம். அதாவது மாறாததுனு சொல்லலாம்.

எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதையும் கேள்வி கேட்கணும்னு உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்" என்று பேசியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை கையில் எடுத்துள்ள பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள், இந்துக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்தார் என பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். ராஜஸ்தானின் தங்க்பாரில் பாஜகவின் யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமித்ஷா பேசியதாவது:- சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதிக்கிறது.

'இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரசும் திமுகவும் வாக்கு வங்கிக்காக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம். லஷ்கர் இ தொய்பாவை விட பயங்கரமானது இந்து அமைப்புகள் என ராகுல் காந்தியும் பேசியிருக்கிறார். சனாதன தர்மத்தை கடந்த 2 நாட்களாக இந்தியா கூட்டணியினர் அவமதித்து வருகின்றனர்" என கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

Home Minister Amit Shah Slams Udhayanidhi Stalin remarks about sanatana dharma

முன்னதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. டெல்லி போலீசில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கொடுத்து இருந்தார். அதில், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவருடைய கருத்தால் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுவிட்டன.

மதத்தின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தனது புகாரில் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+