மும்பை குண்டு வெடிப்பு: யாகூப் மேமன் கருணை மனு- நிராகரிக்க ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை

டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
1993ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் 1994ஆம் ஆண்டு நேபாளத்தின் காத்மண்டு விமானநிலையத்தில் யாகூப் மேமன் சிக்கினார். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐயிடம் யாகூப் மேமன் ஒப்படைக்கப்பட்டார். மும்பை குண்டுவெடிப்பை வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் 2007ஆம் ஆண்டு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்தது.
தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மேமன் கருணை மனு அனுப்பினார்.
தற்போது நிலுவையில் இருக்கும் யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications