ஷைன், லிவோ உட்பட 4 வகை பைக்குகளுக்கு 18,000 ரூபாய் பிளாட் டிஸ்கவுண்ட்.. ஹோண்டா அதிரடி
மும்பை: புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.
இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. நாளை முதல் பி.எஸ்.3 வகை வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ முடியாது. சுமார் 8.25 லட்சம் வாகனங்கள் தேங்கியுள்ள நிலையில், குறைந்த விலையில் அவற்றை விற்பனை செய்ய பைக் நிறுவனங்கள் முடிவு செய்து டிஸ்கவுண்ட் விலையை அறிவித்துள்ளன.

டிஸ்கவுண்ட்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது.

ரூ.18000 டிஸ்கவுண்ட்
ஹோண்டா நிறுவனத்தின் ட்ரீம் யுகா, லிவோ, சிபி ஷைன் மற்றும் சிபி ஷைன் 125 ரக பைக்குகள் விலை மிகவும் குறைந்துள்ளது. அதாவது இவற்றுக்கு ஒரேடியகா ரூ.18000 டிஸ்கவுண்ட் அறிவித்துள்ளார்கள் டீலர்கள் (டெல்லி நிலவரம்).

ட்ரீம் யுகாா
ஹோண்டா ட்ரீம் யுகா 110 சிசி மோட்டார் சைக்கிள், 74 கிலோமீட்ட்ர மைலேஜ் தரக்கூடியது. 5 வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கும். டியூப்லெஸ் டயர், மெய்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரி உள்ளிட்ட பல வசதிகளை கொண்டது.

லிவோ
ஹோண்டா லிவோ நிறுவனம் 110 சிசி இன்ஜின் திறன் கொண்டது. மகிந்திரா சென்டுரோ பைக்கை போன்ற சாயல் கொண்டது. ஹோண்டா ஷைன் 125 சிசி பைக், எக்சிகியூட்டிவ் வகையை சேர்ந்தது.

இன்னும் ஒருநாள்தான்
மார்ச் 31 அதாவது இன்று இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் பைக் நிறுவனங்கள் உள்ளன. எனவே தள்ளுபடி குறித்த தகவல் அறிந்ததும் நேற்று மாலை முதலே வாடிக்கையாளர்கள் ஷோரூம்களை முற்றுகையிட தொடங்கினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications