உ.பியில் கவுரவக் கொலை: காதலனோடு சென்ற பெண்ணை சுட்டு எரித்த கொடூர அண்ணன்
லக்னோ: காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவரது அண்ணனே சுட்டுக் கொன்று, சடலத்தையும் எரித்த கொடூர சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது..
அலிகார் மாவட்டத்தில் உள்ள சபாப்பூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண், ஒருவர், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, அவரையே திருமணம் செய்து கொண்டு, கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தார்.
கணவருடன் ஏற்பட்ட சண்டையால் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அந்த பெண், முன்னாள் கிராமத் தலைவரான அவரது அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அண்ணன், உடன் பிறந்த சகோதரி என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக அந்த பெண்ணை சுட்டுக் கொன்றார்.
தடயம் தெரியாமல் இருப்பதற்காக பிணத்தை அவரே எரித்தபோது எழுந்த புகை மூட்டத்தை கண்டு சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்து வீட்டினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீசார் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, சடலத்தை போட்டுவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டிருந்தார்.
பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான அந்த பெண்ணின் அண்ணனையும் அவரது குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications