For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோட்டல்கள் மூடல்... உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட திருப்பதி பக்தர்கள்: வீடியோ

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று உணவகங்கள் மூடப்பட்டன. இதனால் திருப்பதியிலும் உனவகங்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் உணவு கிடைக்கமால் மிகவும் அவதிப்பட்டனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

திருப்பதி: மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கச் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த வரிவிதிப்பை எதிர்த்து இன்று ஹோட்டல்களும் மருந்துக்கடைகளும் மூடப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். திருப்பதியில் பக்தர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்க சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவகங்கள் மற்றும் மருந்தகங்களின் உரிமையாளர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரணம் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் உணவகங்களுக்கு வரிசுமை இப்போது இருப்பதை விட 5லிருந்து 12 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் உணவகங்கள் வேறு வழியின்றி உணவுகளின் விலையைக் கூட்டும்போது மக்கள் உணவகங்களுக்கு வருவது குறையும். வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் உணவக உரிமையாளர்கள் இன்று கடையடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Hotels and medical shops shut down to protest against GST

இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக சென்று பகதர்கள் அங்குள்ள உனவகங்கள் மூடியிருந்த காரணத்தால் உணவு கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகினர். திருப்பதி மட்டுமில்லாமல் கோடை காலம் என்பதால் சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றவர்கள் அங்கு உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் சாப்பாடு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர்.

English summary
Hotels and medical shops shut down to protest against GST which is compelled by central government. In tourist places hotels are shut down and tourist affected with out food in Tirupati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X