பாஜகவின் வெற்றிக்கு உதவிய தலித் வாக்காளர்கள்.. கை கொடுத்த ஸ்ரீராமுலு!
கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றிபெற அந்த மாநிலத்தில் இருக்கும் தலித் வாக்காளர்கள் பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றிபெற அந்த மாநிலத்தில் இருக்கும் தலித் வாக்காளர்கள் பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள். இதற்கு பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 111 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றிபெற அந்த மாநிலத்தில் இருக்கும் தலித் வாக்காளர்கள் பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள். இதற்கு பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
தலித் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் எல்லாம் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இது முழுக்க முழுக்க ஸ்ரீராமுலு மூலம்தான் சத்தியம் ஆனதாக கூறியுள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்த அவர் செய்த பிரச்சாரம்தான் இந்த ஆதரவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமாக இருக்கும் இவர் மீது பாஜக அதிக நம்பிக்கை வைத்து இருந்தது. இவர்தான் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. தற்போது இந்த தலித் ஆதரவு காரணமாக அவர் கண்டிப்பாக துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவர் போட்டியிட்ட இரண்டு தொகுதியில் பதாமி தொகுதியில் சித்தராமையாவிற்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளார். ஆனால் முலக்குமூறு தொகுதியில் அபார வெற்றிபெற்றுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications