இந்தியாவை மிரட்டும் டெங்கு: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
டெல்லி: ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் இந்திய மக்களை டெங்கு காய்ச்சல் தாக்கி வருகிறது.
டெல்லியில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மும்பை, புனே, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஏழை, பணக்காரன், நகரவாசி, கிராமவாசி என்ற பாகுபாடு இல்லாமல் பலருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.
டெல்லி தான் டெங்குவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கரீனா கபூர்
வெப்பமாக உள்ள இடங்களில் வரும் டெங்கு காய்ச்சலால் முதலில் பாதிக்கப்பட்ட பிரபலம் பாலிவுட் நடிகை கரீனா கபூர். ஏடீஸ் ஈஜிப்டை கொசுவில் உள்ள வைரஸால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

அனில் கபூர்
மும்பையில் பிரபலங்கள் வசிக்கும் மலபார் ஹில்ஸ் மற்றும் ஜுஹு பகுதியையும் கொசுக்கள் விட்டுவைக்கவில்லை. பாலிவுட் நட்சத்திரங்கள் ஜூஹி சாவ்லா, அனில் கபூர், ஜிதேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகரிப்பதாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

டெங்கு
டெங்கு ஒன்றும் இந்தியாவில் புதிதாக பரவவில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும்
கடந்த ஆண்டு மட்டும் அந்த எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏன்?
போதிய ஆய்வு செய்யாதது, காலதாமதமாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கியது, நிபுணர்கள் பற்றாக்குறை, பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாதது ஆகியவை இந்தியாவில் டெங்கு வேகமாக பரவ காரணம்.

இந்தியா
ஆண்டுதோறும் உலக அளவில் 96 மில்லியன் பேர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 70 சதவீதம் பேர் ஆசியாவில் உள்ளவர்கள். மேலும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களில் 34 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளவர்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் 33 மில்லியன் பேர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள்.

மலேரியா
இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டு பலியாகுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் டெங்குவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெங்கு
இந்தியாவில் நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதிகமாக கட்டுமானங்கள் நடக்கும் இடங்களில் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. கழிவு மேலாண்மை சரியில்லாததும் டெங்கு காய்ச்சல் பரவ காரணம். தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வைப்பதும், பிரபலங்கள், பணக்காரர்கள் தங்களின் வீடுகளில் கொசு மருந்து அடிக்க விடாமல் அரசு ஊழியர்களை தடுப்பதும் டெங்கு கொசுக்கள் அதிகரிக்க காரணம்.

தடுப்பூசி
தடுப்பூசி மட்டும் போடுவதால் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications