சென்னையை விட கோவா காற்று உப்பு தன்மை கம்மி, புழுக்கம் குறைவு! ஃபீல் செய்துள்ளீர்களா? காரணம் இவைதான்!
கோவா: என்னதான் கடலோரத்தில் இரு நகரங்களும் அமைந்திருந்தாலும், கோவாவிலும் சென்னையிலும் வீசும் காற்று வெவ்வேறு விதமாக உணரப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இரு நகரங்களுக்கும் சென்றவர்கள் கோவாவின் காற்று ரிப்ரஷாகவும், சென்னையில் வியர்த்து வடிவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள். இதற்கு, புவியியல் அமைவிடம், பருவநிலை, ஈரப்பதம் மற்றும் கடலை ஒட்டிய தன்மை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

புவியியல் அமைவிடம், காலநிலை:
- கோவா: இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோவா, வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது. நீண்ட கடற்கரை மற்றும் பல்வேறு குட்டி குட்டி கடற்கரைகள் இங்கு காணப்படுகின்றன. அடர்ந்த மரங்களை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைகள் கோவாவை சூழ்ந்து பருவநிலையில் பங்களிப்பு தருகிறது, இது சென்னையை விட வேறுபட்ட வானிலையை உருவாக்குகின்றது.
- சென்னை: இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, ஆண்டு முழுவதும் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் (Humidity) கொண்ட வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலையை கொண்ட பகுதியாகும். வங்காள விரிகுடா கடல் இந்த பகுதியின் வானிலையை பெரிதும் பாதிக்கிறது.
ஈரப்பதம்:
கடலோர பகுதிகளில் அமைந்துள்ளதால், கோவாவிலும் சென்னையிலும் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும், அவற்றின் அளவு மற்றும் அதை உணர்வதில் வேறுபாடு உள்ளது. சென்னையில், பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய பருவங்களில், அதிக ஈரப்பதம் காணப்படும். இது காற்றை "உப்பு கலந்ததாக" உணரச் செய்யும்.
கடலை ஒட்டிய தன்மையும் காற்றும்:
- கோவா: அரபிக்கடல், வங்காள விரிகுடலை விட பொதுவாகவே அமைதியாக காணப்படும் கடலாகும். அலை வடிவங்கள் மற்றும் கடல் சூழ்நிலைகள் காரணமாக, கோவாவில் வீசும் காற்றில் சென்னையில் இருப்பது போல் அதிக உப்பு இருக்காது.
- சென்னை: வங்காள விரிகுடல் கொந்தளிப்பான கடல் அலை மற்றும் அடிக்கடி ஏற்படும் புயல்களுக்கு பெயர் பெற்ற பகுதியாகும். இவை கடலில் இருந்து காற்றுக்குள் அதிக உப்பை கலக்கின்றன. சென்னையில் வீசும் காற்று வலுவானதாகவும், அலைகள் அதிக சீற்றத்துடன் இருப்பதாலும், காற்றில் உப்புத்தன்மை அதிகமாக உணரப்படும்.
நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல்:
நகரமயமாக்கல் காற்று தரத்தையும் அதை உணர்க்கும் விதத்தையும் பாதிக்கும். பெரிய பெருநகர பகுதியான சென்னையில், சுற்றுலாத் தலமாகவும், குறைந்த தொழில்மயமாக்கல் கொண்ட பகுதியாகவும் இருக்கும் கோவாவை விட வேறுபட்ட சுற்றுச்சூழல் காரணிகள் இருக்கின்றன. இவை அனைத்தின் விளைவாக, காற்றின் தன்மையில் வேறுபாடுகளை உணர முடிகிறது.












Click it and Unblock the Notifications