பெயர் இல்லை.. பெரும்பான்மையும் இல்லை.. எப்படி எடியூரப்பாவை அழைத்தீர்கள்.. நீதிபதிகள் காரசாரம்
Recommended Video

டெல்லி: ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை, அந்த நிலையில் ஆளுநர் ஏன் அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் என்று நீதிபதிகள் காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்துகிறது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக எடியூரப்பா சமர்ப்பித்த இரண்டு கடிதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கடிதங்களை கொடுத்துத்தான் எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் மூலம் பதவிப் பிரமாணம் செய்தார். இந்த கடிதம் தான் தற்போது பெரும் பிரச்னையை உருவாக்கி உள்ளது.
இந்த கடிதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதில் ஏன் எந்தெந்த எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்ற விளக்கம் கொடுக்கப்படவில்லை. எந்த அடிப்படையில் இந்த கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதில் ஒருவர் பெயரும் இல்லை, 105 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது, எப்படி பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். அவர்கள் எந்த பெரும்பான்மையை ஆளுநரிடம் காட்டினார்கள். எந்த விவரமும் இந்த கடிதத்தில் கொடுக்கப்படவில்லை. இதை எப்படி ஆளுநர் ஏற்றுக்கொண்டார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
முக்கியமாக எடியூரப்பாவிடம் பெரும்பான்மை இல்லை, ஆனால் மஜத காங்கிரஸ் கட்சியிடம் பெரும்பான்மை இருக்கிறது. ஆளுநர் அவர்களைத்தான் அழைத்து இருக்க வேண்டும். ஆளுநர் எப்படி பாஜகவை அழைக்க முடியும், அவரே பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாரா என்று கோபமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications