கடிதங்கள் மூலம் புரட்சி.. புல்லட் ரயிலுக்கு எதிராக குஜராத் விவசாயிகள் போராட்டம்.. முதல் வெற்றி!
புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராக போராடி முதற்கட்ட வெற்றியை சுவைத்து இருக்கிறார்கள் குஜராத் விவசாயிகள்.
டெல்லி: புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராக போராடி முதற்கட்ட வெற்றியை சுவைத்து இருக்கிறார்கள் குஜராத் விவசாயிகள்.
புல்லட் ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்பட இருந்தது. 1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும். இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது.
புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. மோடியின் கோட்டையான குஜராத்திலேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது பாஜகவை அதிர்ச்சி அளிக்க வைத்துள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடிதம் அளித்தனர்
இந்த போராட்டத்தில் குஜராத் விவசாயிகள் செய்த மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜப்பான் அரசுக்கு அவர்கள் எழுதிய கடிதம்தான். 1000க்கும் அதிகமான விவசாயிகள் தனி தனியாக ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். இந்த திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு அனுப்பி உள்ளனர்.

ஜப்பான் நிறுவனத்திற்கும் கோரிக்கை
அது மட்டும் இல்லாமல், இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதே கடிதத்தை தனியாக அனுப்பி இருக்கிறார்கள். எவ்வளவு விவசாய நிலம் பறிபோகிறது, எத்தனை மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள், விவசாயத்தை நம்பி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

வழக்கு தொடுத்தனர்
அதே சமயம் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் இந்த திட்டத்திற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் நிலம் முறையின்றி பறிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு போராட்டம்
தமிழ்நாட்டிலும் மக்கள் இதேபோல் அமைதி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வெற்றியை விவசாயிகள் ருசிக்க முடியவில்லை. சேலம் சாலை பிரச்சனை இன்னும் தீராமல் உள்ளது. ஹைட்ரோ கார்பன் பிரச்சனையில் ஒரு நிறுவனம் சென்றால் அடுத்த நிறுவனம் வருகிறது. பல போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் விடிவுகாலம் பிறப்பதே இல்லை.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications