Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எவ்வளவு கஷ்டம், கண்ணீர்! ஹர்திக் பாண்டியாவின் ஒரு பால்.. திகைத்த மைதானம்! ப்பா எப்படிப்பட்ட சம்பவம்

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்த விதம் பலரையும் கவர்ந்தது. முக்கியமாக அவரின் ஒரு பால் மைதானத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது.

2 மாத ஐபிஎல் கொண்டாட்டம் இன்று முடிவிற்கு வருகிறது. ராஜஸ்தான் - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2022 பைனல் ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் எதிர்பார்க்காத விதமாக முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதிக ரன் அடித்து குஜராத்திற்கு பிரஷர் கொடுக்கலாம் என்று நம்பி ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

குஜராத்

குஜராத்

ஆனால் குஜராத் அணி மிகவும் கட்டுக்கோப்பாக பவுலிங் செய்தது. இடை இடையே பவுண்டரி சென்றாலும்.. குஜராத் அணி பெரிதாக ரன்களை விக்கெட் எடுக்கவில்லை. இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று அதிரடியாக 16 பந்தில் 22 ரன்கள் எடுத்த ஜெய்ஷ்வால் யாஷ் தயால் ஓவரில் அவுட்டான நிலையில் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் குறைந்தது. அதன்பின் இறங்கிய சஞ்சு சாம்சனும் 11 பந்தில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இதில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்தார். அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஹர்திக் பாண்டியா இந்த ஓவர் முழுக்க 134 கிமீ வேகத்திற்கும் அதிகமாக பவுலிங் செய்தார். இந்த சீசன் முழுக்கவே அவர் 134 கிமீ வேகத்திற்கும் அதிகமாக பவுலிங் செய்தார். இந்த சீசனில் மட்டும் இதுவரை 7 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா எடுத்து இருக்கிறார்.

Recommended Video

    IPL 2022 Final: Rajasthan Royal-ன் Loss-க்கு Reasons | Aanees Appeal | RR vs GT |#Cricket
    அந்த ஒரு பால்

    அந்த ஒரு பால்

    அதிலும் அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா 143 கிமீ வேகத்தில் பவுலிங் செய்தார். அவர் இவ்வளவு வேகமாக வீசிடத்தைமைதானமே வியந்து பார்த்தது. ஏனென்றால் அவர் மீடியம் பாஸ்ட் பவுலர். ஆனால் அதையும் மிஞ்சி இன்று வேகமாக பவுலிங் செய்தார். இன்று குஜராத் அணி பவுலர்கள் பலரும் வேகமாக வீசினார்கள். ஷமி 149 கிமீ வேகத்தில் பவுலிங் செய்தார். அதேபோல் லோகி பெர்குசன் 152 கிமீ வேகத்தில் பவுலிங் செய்தார்.

    பவுலிங்

    பவுலிங்

    ஹர்திக் பாண்டியா கடந்த 2020-2021 இறுதி வரை பெரிதாக பவுலிங் செய்யவில்லை. இந்திய அணியில் ஆல் ரவுண்டர் என்ற பெயரில் எடுக்கப்பட்டவர்தான் ஹர்திக் பாண்டியா. பேட்டிங் ஆடுவார்.. பாஸ்ட் பவுலிங்கும் போடுவார் என்பதால் அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் 2020-2021 ஆகிய இரண்டு வருடமாக இவர் பவுலிங் செய்யவில்லை . இவரின் காலில் செய்யப்பட்ட ஆபரேஷனுக்கு பின் பவுலிங் செய்யவில்லை.

    காயம்

    காயம்

    இரண்டு வருடத்தில் அதிகபட்சம் 10 ஓவர்கள் கூட இவர் வீசி இருக்க மாட்டார். திரும்பி பவுலிங் வீசிய போதும்கூட அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டது. மைதானத்திலேயே இவர் காயம் காரணமாக பல முறை கஷ்டப்பட்டு இருக்கிறார். இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயரிடம் வாய்ப்பு இழந்து கண்ணீரும் விட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.

    அடுத்தடுத்து விக்கெட்

    அடுத்தடுத்து விக்கெட்

    அதிலும் இந்த சீஸனின் பெஸ்ட் பேட்ஸ்மேனான பட்லரையும் இன்று ஹர்திக்தான் 39 ரன்களுக்கு விக்கெட் எடுத்தார். பின்னர் அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா ஹெட்மயர் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்தார். வெறும் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா இன்று எடுத்தார். கேப்டனாக பிரஷரை எடுத்துக்கொள்ளாமல் ஹர்திக் ஆடிய விதம் இன்று பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+