மேற்கு உலகை விடாமல் வெளுத்த இந்தியா.. இது நம்ம காலம்.. மிரண்டு பார்க்கும் அமெரிக்கா.. என்ன நடந்தது ?
சென்னை: அமெரிக்கா தொடங்கி கனடா வரை உலக நாடுகளை இந்திய வெளியுறவுத்துறை அப்படியே மிரள வைத்துள்ளது.
சமீபத்தில் பிரிக்ஸ் மீட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. ஜோஹென்ஸ்பர்க்கில் நடந்த இந்த கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக பிரதமர் மோடி ஜோஹென்ஸ்பர்க் சென்றார்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் ஒப்புதலுடன் புதிய நாடுகளை இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளின் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும், கூட்டமைப்பை பெரிதாக்கும் விதமாகவும் இந்த உறுப்பினர் சேர்க்கை நடந்து உள்ளது. பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் குழுவில் சேர்த்து உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.
மிரண்ட மேற்கு உலகம்: இதன் மூலம் உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஆறு நாடுகள் பிரிக்ஸ் குழுவில் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும்.
இதை கண்டிப்பாக மேற்கு உலக நாடுகள் எதிர்ப்பார்க்கவில்லை. ஆசிய - ரஷ்ய - ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பில் மத்திய கிழக்கு நாடுகள் இணைந்து இருப்பது மேற்கு உலக நாடுகளை கதறவிட்டு உள்ளது. இதன் மூலம் உலகின் 30 சதவிகித பொருளாதாரத்தை பிரிக்ஸ் நாடுகள் பூர்த்தி செய்ய உள்ளன.
மொத்தம் எவ்வளவு: $30.5 டிரில்லியன் (உலகப் பொருளாதாரத்தில் 30%) கிட்டத்தட்ட இந்த பிரிக்ஸ் நாடுகள் கீழ் வந்துள்ளன. இவர்கள் விரைவில் பிரிக்ஸ் மணி என்ற பணத்தை வெளியிட்டு அமெரிக்க டாலருக்கு பதில் அந்த பணத்தை பயன்படுத்த உள்ளன.
மேற்கு உலகம் கதறல்: மேற்கு உலகம் இதனால் கதறிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் தற்போது கனடா விவகாரம் உச்சம் எடுத்துள்ளது. இதில் மேற்கு உலக நாடுகளுக்கு.,. முக்கியமாக கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிற்கு அஞ்சாமல் இந்தியா அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.
கனடா உடன் மோதல்: இதனால் இந்தியா கனடா இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது. இதில் கனடாவின் விசாரணைக்கு பிரான்ஸ், அமெரிக்கா, யுகே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நேரடியாக உதவி செய்ய தொடங்கி உள்ளன. இது இந்தியாவிற்கு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது.
ஆனாலும் இந்தியா இதில் இறங்கி போகாமல்.. நீங்கள் ஆதாரத்தை கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். ஆதாரம் இல்லாமல் பொய்யாக எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டாம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் கன்னடர்களுக்கு விசா தடை, தூதரக அதிகாரி வெளியேற்றம், இந்தியாவில் காலிஸ்தானி அமைப்பாளர்கள் கைது என்று இந்தியா தொடர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அசாத்திய ரா: அமெரிக்கா தொடங்கி கனடா வரை உலக நாடுகளை இந்திய உளவுத்துறை மிரட்ட தொடங்கி உள்ளது. மற்ற நாடுகளில் சென்று ஆபரேஷன் செய்வதன் மூலம் பல வல்லரசு நாடுகளை இந்திய உளவுத்துறையான ரா மிரள வைத்துள்ளது.
அதில் ஒன்றுதான் சமீபத்தில் அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டு. அமெரிக்க மண்ணில் சீக்கியர் ஒருவரை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாம். இது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் பல வெள்ளை மாளிகை சோர்ஸ்கள் பகிர்ந்த தகவலை வெளியிட்டுள்ளன. அதன்படி அமெரிக்க மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டிருக்கலாம் என பிடன் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
நியூயார்க்கில் இயங்கி வரும் வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுனை குறிவைத்ததாகக் கூறப்படும் சதிதிட்டத்தை அமெரிக்கா முறியடித்துள்ளதாம். அமெரிக்க அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. நேரடியாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்த காரணத்தால் இந்த கொலை நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக அந்த செய்திகளில் கூறப்பட்டு உள்ளன.
வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுன் "நீதிக்கான சீக்கியர்களின் குழு" என்ற குழுவில் இயங்கி வருகிறார். இந்த குழுவின் பொது ஆலோசகர் ஆவார். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து காலிஸ்தான் நாட்டை பிரிப்பதற்காக போராடும் குழுக்களில் ஒன்றாகும். இவரைத்தான் கொலை செய்ய இந்தியா முயன்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
கனடா, அமெரிக்காவின் பிரஷர் காரணமாக இந்தியா இறங்கி வரும் என்று மேற்கு உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில்.. இந்தியா அடித்து ஆடுவது மேற்கு உலக நாடுகளை ஒருகணம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications