ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான ' இணைய யுத்தத்தில்' இந்தியாவுடன் கை கோர்க்கும் ரஷ்யா
டெல்லி: உலகின் மிக கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக இந்தியாவுடன் ரஷ்யா கை கோர்க்க இருக்கிறது.
உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த இயக்கத்தில் இணைந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்தாலும் அந்த இயக்கம் இங்கே பலம்பெற்றுவிட்ட எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இதர நாடுகளை இணைத்துக் கொள்வது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறது. தற்போது இந்த பட்டியலில் ரஷ்யாவும் இணைந்துள்ளது.

ஆன்லைன் ஜிகாத்
இந்தியாவும் அமெரிக்காவும் இணையம் வழியேயான 'ஆன்லைன் ஜிகாத்துக்கு' எதிராக இணைந்து செயல்படுவதில் முனைப்புகாட்டி வருகிறது. தற்போது நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவுடன் இந்தியா கை கோர்க்க உள்ளது.

ரஷ்யாவின் உதவி..
இணையம் வழி தீவிரவாத செயல்களை கண்காணிப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே தொழில்நுட்ப ரீதியான உதவியை வழங்கியிருக்கிறது. உலகின் சைபர் ராணுவங்களில் ரஷ்யா முன்னணியில் இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணையும் இளைஞர்கள் குறித்த தகவல்களை ரஷ்யாவும் இந்தியாவும் பகிர்ந்து கொள்வதில்லை. அதே நேரத்தில் இணையத்தின் வழியே தீவிரவாத இயக்கங்களுடன் சாட்டிங் செய்யும் இளைஞர்களை இருநாடுகளும் முழுமையாக கண்காணிக்க உள்ளன. இது தொடர்பான தகவல்களை இந்தியாவுக்கு உடனே ரஷ்யா தெரிவித்துவிடும்.

எமிரேட்ஸ்
இணையம் வழியே மேற்கொள்ளப்படும் தீவிரவாத செயல்களை ஒரு நாடு மட்டுமே கட்டுப்படுத்திவிட முடியாது. அண்மையில் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயன்ற இந்தியர்களை அரபு எமிரேட்ஸ் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

சக்கரவியூக ஆபரேஷன்
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக சக்கரவியூக ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தற்போது ரஷ்யாவும் கை கோர்த்திருப்பது இந்தியாவுக்கு பலம்தான் என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications