மாநில கட்சிகளை ஒருங்கிணைத்த குமாரசாமியின் பதவியேற்பு விழா.. புதிய கூட்டணியின் அடித்தளம்!
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் மாநில கட்சிகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டது புதிய கூட்டணிக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் மாநில கட்சிகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டது புதிய கூட்டணிக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.
கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவு மூலம் அம்மாநில முதல்வராக மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியின் பதவி ஏற்றுள்ளார்.பதவியேற்பு விழாவில் இந்தியாவின் முக்கிய தலைவர்கள, கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பாஜக கட்சியை தவிர, பல மாநில தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா,குமாரசாமியின் தந்தையும், மஜத கட்சியின் தேசிய தலைவருமான தேவ கவுடா, காங்கிரஸின் மல்லிகார்ஜுனா கார்கே, சரத் பவார், சரத்யாதவ், டி.ராஜா, லாலுவின் மகன் தேஜஸ்வினி, சீதாராம் யெச்சுரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாபெரும் நிகழ்வு இப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க வழிவகை செய்துள்ளது. ஏற்கனவே மம்தா பானர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும் மூன்றாவது அணி அமைக்க மாநிலதலைவர்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது ஒரே மேடையில் இந்த மாநில கட்சிகள் இடம்பிடித்து இருப்பதால் இது பெரிய சந்திப்பாக மாறியுள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய அடித்தளமாக இருக்கும்.
மூன்றாவது அணி உருவானால் அது கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் கர்நாடகாவில் கடந்த 4 நாட்களில் நடந்த அரசியல் மாற்றம் காங்கிரஸ் கட்சிக்கு பல படிப்பினைகளை கொடுத்துள்ளது. இவர்கள்தான் கண்டிப்பாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மேன் ஆப் தி மேட்சாக இருக்க போவது. இதனால் காங்கிரஸ் கட்சி இவர்களுடன் இருப்பது மட்டுமே அவர்களுக்கு நன்மை பயக்கும். அவர்களுடன் காங்கிரஸ் மேடையை பகிர்ந்து கொண்டதும், அதையே பிரதிபலிக்கிறது.
திமுக, கம்யூனிஸ்ட், திரிணாமுல், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, , தெலுங்கானா ராஸ்ட்ரிய சமிதி, மதச் சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகள் எல்லாம் தற்போது பாஜகவிற்கு எதிராக களமிறங்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications