இன்றுடன் கெடு முடிகிறது.. பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது எப்படி தெரியுமா?
டெல்லி: பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை இணைப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.
இணையதளத்தின் மூலம் இணைப்பு சாத்தியப்படுகிறது. அதுகுறித்த ஒரு விளக்கம் இது:
incometaxindiaefiling.gov.in என்ற இணைய தளத்தில் முதலில் நுழைய வேண்டும். அதில், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான திரையை கிளிக் செய்ய வேண்டும்.

சரி பாருங்க
ஆதார் எண்ணை பதிவிடும் முன்பு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்கள் சரியாக இருக்கின்றதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இணைக்கலாம்
அனைத்து தகவல்களையும் சரி பார்த்த பிறகு ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிய வேண்டும். பின்னர் இணைக்கவும் என்ற பட்டனைத் தட்ட வேண்டும்.
அதன் பின்னர் ஆதார் எண் பான் எண்ணுடன் இணைக்கப்படும். பான் மற்றும் ஆதார் கார்டு இரண்டிலும் உள்ள தகவல்கள் சரியாக இருந்தால் மட்டுமே இரண்டும் இணையும்.

செல்போன் போதும்
ஆதார் இணையதளத்தில் சென்றும் பான் கார்டை இணைக்கலாம். மேலும் செல்போனிலேயே பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க முடியும்.
UIDPAN என்று ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு ஸ்பேஸ் விட்டு 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் விட்டு 10 இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும். இந்தக் குறுஞ்செய்தியை 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இப்படி அனுப்புவதன் மூலம் எளிதாக ஆதார் மற்றும் பான் எண்களை இணைத்து விடலாம்.

பிழை இருக்க கூடாது
ஆதார் கார்ட்டில் உள்ள பெயர், பிறந்த தேதி என அனைத்து தகவல்களும் பான் கார்டுடன் ஒத்துப் போக வேண்டும். இல்லை என்றால் இணைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சின்ன பிழை இருந்தால் கூட பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது. இதே போன்ற சிக்கல் எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போதும் ஏற்படுகிறது.

பல முறை பார்க்கவும்
இணையம் மற்றும் செல்போன் மூலம் ஆதார் மற்றும் பான் எண்கள் இணைக்கப்படும் போது, எல்லா தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். இல்லை என்றால் இரண்டும் இணையாது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications