திரிபுராவில் வென்றது பாஜகவின் "டிரிக்"... மாணிக் சர்க்கார் வீழ்த்தப்பட்டது இப்படித்தான்!
Recommended Video

அகர்தலா: 3 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் அதிக அதிர்ச்சியைக் கொடுத்திருப்பது திரிபுரா முடிவுகள்தான். யாரும் எதிர்பாரத வகையில் மாணிக் சர்க்காரின் ஆட்சியை பாஜக வீழ்த்தியுள்ளது.
இந்தியாவிலேயே மிக மிக எளிமையான முதல்வர் என்ற பெருமையுடன் வலம் வந்தவர் சர்க்கார். 25 வருட காலம் அங்கு அசைக்க முடியாத முதல்வராக இருந்தவர். இன்று அவர் வீழ்த்தப்பட்டிருப்பது நிச்சயம் அதிர்ச்சியான செய்திதான்.
ஆனால் இடதுசாரிகளின் கோட்டையில் காணப்பட்ட ஓட்டைகளை படு சாதுரியமாக அடையாளம் கண்டு புகுந்து புறப்பட்டு கோட்டையை தகர்த்துள்ளது பாஜக. இங்கு பாஜகவின் தந்திரமான செயல்பாடுகளே வென்றுள்ளன.

எளிமையை வீழ்த்திய வலிமை
இந்தத் தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக செயல்பட்டது பாஜக. பிரசாரத்தில் மோடி முன்னிறுத்தப்பட்டார். எங்கு பார்த்தாலும் மோடி படம்தான். மோடியே இங்கு வந்து தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். வாக்காளர்கள் "சிறந்த" முறையில் கவனிக்கப்பட்டதாகவும் புகார்கள் உண்டு. மறுபக்கம் வழக்கம் போல எளிமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது இடதுசாரி கூட்டணி.

திட்டமிட்டு செயல்பட்ட பாஜக
பாஜக இந்தத் தேர்தலில் மிகவும் திட்டமிட்டு இடதுசாரிகளைக் குறி வைத்தது. தனக்கென்று திரிபுராவில் பலம் இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்த பாஜக அதற்கேற்ப காய்களை நகர்த்தியது.

அடிப்படையே இல்லாத பாஜக
தன்னிடம் இல்லாத பலத்தை சேர்ப்பதற்காக மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட பாஜக அதற்காக குறி வைத்தது காங்கிரஸ் மற்றும் தனக்கு எதிரான வாக்கு வங்கிகளைத்தான். அதை சிதைத்து சிதறடித்து தனக்கென புது பலத்தை உருவாக்கிக் கொண்டு தேர்தலைச் சந்தித்தது.

சிதைந்த காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுதிப் ராய் பர்மன் இதில் முக்கியமானவர். இவரை தன் பக்கம் இழுத்த பாஜக அவர் மூலமாக கணிசமான வாக்கு வங்கியையும் தன் பக்கம் கொண்டு வந்தது.

சூறாவளியாக சுழன்ற பிப்லப்
மறுபக்கம் மாநில பாஜக தலைவர் பிப்லப் தேவ் சூறாவளியாக சுழன்று பாஜகவை பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டினார். அடிமட்ட அளவில் பாஜகவை பலப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது.

பழங்குடியினர் வாக்குகள் அபேஸ்
மறுபக்கம் பழங்குடியினரின் வாக்குகளை அழகாக வாரிச் சுருட்டியது பாஜகவின் கேம் பிளான் ஆகும். வழக்கமாக இவை கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ் கட்சிக்குப் போகக் கூடியவை அதை மிக அழகாக தன் பக்கம் திருப்பியது பாஜக. அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு உறுதிகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுமா என்பது விவாதத்துக்குரியது.

கம்யூனிஸ்டுகள் சுதாரிக்கவில்லை
ஒரு பக்கம் இப்படி பாஜகவினர் ஆர்ப்பாட்டமாக போய்க் கொண்டிருந்த நிலையில் வழக்கம் போல கம்யூனிஸ்டுகள் தங்களது ஆட்சி மீதும், ஆட்சியின் திட்டங்கள் மீதும், கொள்கை மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்து நிதானமாக போய்க் கொண்டிருந்தனர். சுதாரிக்கவில்லை. கம்யூனிஸ்டுகளின் போஸ்டர்களில் ஒரு போஸ்டரில் கூட முதல்வர் மாணிக் சர்க்காரின் படம் கிடையாது என்பதிலிருந்தே அவர்கள் எத்தனை எளிமையானர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கோட்டை விட முக்கியக் காரணம்
அதீத நம்பிக்கையால்தான் திரிபுராவை கம்யூனிஸ்டுகள் இழந்துள்ளனரா என்ற கேள்வியையும் புறம் தள்ளி விட முடியவில்லை. பல காரணங்கள் இருந்தாலும், மாணிக் சர்க்கார் போன்ற சிறப்பான முதல்வரை, செயல்பாட்டாளரை இழந்திருப்பது திரிபுராவுக்கு ஏதாவது ஒரு வகையில் இழப்பாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications