‛‛கைக்கொடுத்த பாராசூட்’’.. தரையில் விழுந்த தேஜஸ் விமானத்தில் பைலட் தப்பியது எப்படி? திக்திக் வீடியோ
ஜெய்ப்பூர்: தேஜஸ் ரக விமானம் முதல் முறையாக இன்று விபத்தில் சிக்கியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மாரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் இன்று விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து கருகியது. முன்னதாக தரையில் வேகமாக மோத சென்ற தேஜஸ் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் பைலட் உயிர் தப்பியது எப்படி? என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
இந்திய விமானப்படையில் ஏராளமான விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் போர் நடவடிக்கைக்கும், இந்தியாவின் எல்லைகளில் பறந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும், பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில் மக்களுக்கு உதவவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பழைய மிக் 21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக தேஜஸ் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. மிக் 21 ரக விமானத்தை விட அதிக செயல் திறனில் இந்த விமானம் உருவாக்கப்பட்டது. தேஜஸ் என்பது வெளிநாடுகளின் பங்களிப்பு இன்றி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன விமானமாகும்.
இந்த விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் வடிவமைத்தது. உண்மையில் இந்த விமானம் இந்திய விமானப்படைக்கு அதிக பலத்தை வழங்கி வருகிறது. ஏனென்றால் இந்த விமானம் அதிகபட்சம் 2,205 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதோடு 4000 கிலோ வரை சுமந்து செல்ல முடியும். இதற்கிடையே தான் தேஜஸ் போர் விமானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
जैसलमेर में सेना का फाइटर प्लेन क्रैश: घर की दीवार से टकराया विमान, भारत शक्ति अभ्यास में जा रहा था |#Rajasthan #Jaisalmer #fighterplanecrash #jaisalmer pic.twitter.com/X58wLsmx6y
— Kishore Singh Rathore (@Fortkotra) March 12, 2024
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் விமானம் இன்றைய பயிற்சியின்போது திடீரென்று துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியது. அதாவது ராஜஸ்தானில் ஜெய்சால்மார் அருகே உள்ள விடுதியின் அருகே தேஜஸ் போர் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று விமானம் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
முன்னதாக பைலட் தேஜஸ் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் பறந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? என்பது உடனடியாக தெரியவில்லை. இதனால் தேஜஸ் விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? என்பது பற்றிய விமானப்படை சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் விபத்தில் சிக்குவதற்கு சில வினாடிகள் முன்பு தேஜஸ் விமானத்தில் இருந்து பைலட் எப்படி பராசூட் மூலம் தப்பினார் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது கட்டுப்பாட்டை இழந்த தேஜஸ் விமானம் வானில் இருந்து மின்னல் வேகத்தில் தரையை நோக்கி பறந்து வருகிறது. இந்த வேளையில் பைலட் விமானத்தில் உள்ள Eject பொத்தானை அழுத்தி பராசூட் உதவியுடன் பறந்து செல்கிறார். விமான இருக்கையில் இருந்து வெளியேறி பாராசூட்டில் பைலட் பறப்பதை அந்த பகுதியில் இருந்தவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக போர் விமானங்களை ஒருவர் அல்லது 2 பேர் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இன்று விபத்தில் சிக்கிய தேஜஸ் போர் விமானம் ஒரு பைலட்டால் இயக்கக்கூடியது. மேலும் போர் விமானங்களில் ஏதேனும் கோளாறு அல்லது பிரச்சனை ஏற்பட்டால் பைலட்டுகள் அதில் இருந்து பராசூட் மூலம் பறந்து தப்பிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி தான் இன்று தேஜஸ் போர் விமானம் விபத்தில் சிக்கினாலும் கூட அதன் பைலட் பத்திரமாக உயிர் தப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications