Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொச்சியில் செந்தில் பாலாஜி தம்பி அசோக் கைதானது எப்படி? “லிஸ்ட்லயே இல்லயே”.. வெளிவரும் பரபர தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

கொச்சி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியில் கைது செய்துள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவாரா அல்லது டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை அதிகாரிகள் பெற்று பதிவு செய்துள்ளனர். மேலும், 120 பக்க குற்றப் பத்திரிக்கையுடன் 3,000+ பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

How was Senthil Balajis younger brother Ashok arrested in Kochi?

சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி: நேற்றுடன் செந்தில் பாலாஜியின் காவல் முடிந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அவரை ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணையில் துன்புறுத்தல்கள் ஏதேனும் கொடுக்கப்பட்டதா? என்று செந்தில் பாலாஜியிடம் நீதிபதி கேட்டார். அதற்கு செந்தில்பாலாஜி இல்லை என்று கூறினார். இதனையடுத்து செந்தில்பாலாஜியின் காவலை ஆகஸ்ட் 25ஆம் வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி அதனைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மனைவி நிர்மலாவின் பெயரில் உள்ள சொத்தை அமலாக்கத்துறை, ஓரிரு நாட்களுக்கு முன்பு முடக்கியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார், அவரது மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி ஆகியோர் ஆஜராக வில்லை என்பதால் சொத்து முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொச்சியில் அசோக் குமார் கைது: இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கேரள மாநிலம் கொச்சியில் இன்று கைது செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சிக்கு சென்று அசோக்குமாரை கைது செய்துள்ளனர். அசோக்குமாரை இன்று மாலையில் சென்னை அழைத்து வந்து, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவரது தம்பி அசோக் குமார் ஆஜராகவில்லை. பின்னர் லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது. ஆனாலும், அசோக் குமார் அமலாக்கத்துறையிடம் ஆஜராகாத நிலையில் தான், தலைமறைவாக இருந்த அசோக் குமாரை கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொச்சி ஏர்போர்ட்டில்: அசோக் குமார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாக கருதி, அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனால் விமான நிலையங்களில் அசோக் குமார் பாஸ்போர்ட் குறித்த தகவல்களுடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு இன்று அசோக் குமார் வந்ததாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அவரை கைது செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அசோக் குமார் கைது செய்யப்பட்டது எப்படி என்ற மேலதிக தகவல்கள் விரைவில் விரிவாகத் தெரியவரும்.

சென்னையா டெல்லியா?: இதற்கிடையே, கொச்சியில் இருந்து சென்னை வரும் எந்த விமானத்திலும் பயணிகளின் பட்டியலில் அசோக்குமாரின் பெயர் இல்லை என்பதால், அவர் கொச்சியிலேயே விசாரிக்கப்படுவாரா அல்லது டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அல்லது, சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வரப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+