51 வயதிலும் தீரத்துடன் போராடி இன்னுயிரை ஈந்த பதன்கோட் ஹீரோ சஞ்ஜீவன் சிங் ராணா!
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலியானார்கள்.
இத்தாக்குதலில் உயிரிழந்த 7 வீரர்களில் ஒருவர்தான் சஞ்ஜீவன் சிங் ராணா. இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக இருக்கும் இவரின் வீரமரணம் குறித்த செய்தி அறிந்ததும் இவரது சொந்த கிராமமான சியுன்க் முழுவதும் கண்ணீர் வடித்தது.

51 வயதான இந்த ஹீரோவின் மனைவியும், குழந்தைகளும் ஆற்றொன்னா சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். டிபென்ஸ் செக்யூடிட்டி கார்ப்பரேஷனின் ஊழியரான இவர் ஒரே ஆதரவாம் அவருடைய குடும்பத்திற்கு.
வேதனையின் உச்சத்தில் குடும்பம்:
அவருடைய மனைவியான பிங்கி தேவி பேசக்கூட வலுவிழந்த நிலையில் உள்ளார். அத்தாக்குதலில் மிகவும் மோசமான நிலையில் குண்டுகளை உடலில் தாங்கி உயிரிழந்துள்ளார் சஞ்ஜீவன் என்று அவருடைய உறவினர்கள் மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மார்பைத் துளைத்த குண்டுகள்:
மார்பில் 5 குண்டுகள் பாய்ந்தும் கடைசி வரை போரடிய அவர் சமாளிக்க முடியாமல் சரிந்து இறந்துள்ளார். நாளை அவருடைய உடல் அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்துவரப்பட உள்ளது.
நிர்கதியான குடும்பம்:
உயிரிழந்த சஞ்ஜீவனுக்கு ஒரு மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒருவர் 12 ஆம் வகுப்பும், மற்றொருவர் பிசிஏவும் படிக்கின்றனர். மகன் சுபும் பிபார்மா படித்து வருகின்றார்.
குடும்பமே ராணுவத்திற்கு சமர்ப்பணம்:
5 சகோதரிகளுடன் பிறந்த சஞ்ஜீவனின் பெற்றோர் உயிருடன் இல்லை. அவருடைய குடும்பத்தில் ராணுவத்தில் சேர்வது வழிவழியாக தொடரும் வழக்கமாம். சஞ்ஜீவனின் தந்தை ரத்தன் ராணா ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். 2009 இல் ஓய்வு பெற்ற சஞ்ஜீவன் உடனடியாக ஓய்வெடுக்காமல் கடந்த வருடத்திற்கு முன்பு டிஎஸ்சியில் சேர்ந்துவிட்டாராம்.
நாளை இறுதிச்சடங்குகள்:
நாட்டிற்காக தன் இன்னுயிரையே ஈந்த வீரரான சஞ்ஜீவனின் இறுதிச்சடங்கு முழுமையான அரசு மரியாதையுடன் நாளை அவரது சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளது. மற்ற 6 வீரர்களின் உடல்களும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications