Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடையின்றி.. இரவில் நிர்வாணமாக தெருதெருவாக திரியும் பெண்.. வீட்டின் கதவுகளை தட்டி.. பேரதிர்ச்சி வீடியோ

நிர்வாண கோலத்துடன், தெருக்களில் நடமாடிய பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை கூட்டி வருகிறது

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: அடையாளம் தெரியாத பெண் ஒருவர், ஆடையின்றி நிர்வாணமாக தெருத்தெருவாக சுற்றித்திரியும் அதிர்ச்சி வீடியோ
வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த ஜனவரி 29ம் தேதி அன்று இரவு, யாரோ ஒரு பெண், அங்கிருக்கும் ஒருவரின் கதவைத் தட்டியதாக தெரிகிறது..

அந்த பெண் நிர்வாணமாக காணப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது... இதை பார்த்து பதறிப்போன அந்த வீட்டின்நபர், மறுநாளே, அதாவது ஜனவரி 31ம் தேதி, ராம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுதொடர்பாக புகார் தந்துள்ளார்..

தெருவில் நிர்வாண கோலம்

தெருவில் நிர்வாண கோலம்

ஆனால் அந்த பெண் யார்? எங்கே இருக்கிறார்? என்பதையும் போலீசாரால் இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாம். புகார் அளித்த உள்ளூர்வாசி இதை பற்றி சொல்லும்போது, "அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும்.. புகார்தாரரின் வீட்டு வாசலில் இருந்து வெளியேறியபோது, அந்த பெண்ணை 2 பைக்கில் வந்தவர்கள் சிலர் பின்தொடர்ந்து வந்தார்கள்" என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ராம்பூர் போலீசார் விசாரணை நடத்திகொண்டிருக்கிறார்கள்.. ஆனால், அந்த பெண்ணின் நோக்கத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

நிர்வாண பெண்

நிர்வாண பெண்

இதுகுறித்த விவரங்களை மேலும் சேகரிக்க அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் சொல்லி உள்ளார்கள்.. அதேபோல, அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணிகளையும், கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த பெண்ணை எங்காவது கண்டால், அந்த பெண்ணை குறித்த தகவலை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்களை போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இப்போதைக்கு அந்த நிர்வாண பெண்ணின் சிசிடிவி வீடியோ வைரலாகி, வாட்ஸ்அப் மற்றும் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.. அப்படி இருந்தும் இதுவரை யாரும், அந்த பெண்ணை பற்றி தகவலை தரவில்லை என்பதால், விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..

 விரட்டி விரட்டி

விரட்டி விரட்டி

உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை ஏராளமான வன்முறைகள் நடந்து வருகின்றன.. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடந்து, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.. நிர்வாண கோலத்தில் காணப்பட்ட இந்த இளம்பெண்ணை 2 பேர் பைக்கில் விரட்டி வந்துள்ளார்கள் என்றால், அதுவும் இரவு நேரத்தில், பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதால், அங்குள்ள மக்களுக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நிர்வாண கோலம்

நிர்வாண கோலம்

சிலர் இந்த வீடியோவை பார்த்து தங்கள் கவலைகளை பதிவிட்டு வருகிறார்கள்.. அவர் ஒருவேளை மனநிலை சரியில்லாமல் இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.. மேலும் சிலரோ, இன்னுமா அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை? எந்த ஆபத்தில் சிக்கி இருக்கிறாரோ தெரியவில்லையே? இந்த குளிரிலும் அந்த பெண் நிர்வாணமாக நடப்பது அவளுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்? என்றும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள்.. ஆனால், அந்த பெண்ணின் நலன் கருதி, அந்த நிர்வாண வீடியோ சோஷியல் மீடியாவில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+