தப்பாத குறி.. பாக். தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பும் மாஸ்டர் மைண்ட் காலி! யார் இந்த Human GPS?
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் வழிகளை துல்லியாக வைத்து கண்டுபிடித்து வைத்து, பயங்கரவாதிகளை நம் நாட்டுக்கு தொடர்ந்து அனுப்பிய வந்த ‛Human GPS' என அழைக்கப்படும் பயங்கரவாதி பாகு கானை இன்று நம் நாட்டின் ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றனர். இந்நிலையில் தான் பாகு கான் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளுக்கு சோறுட்டியூம், பாலூட்டியும் வளர்த்து வருகிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டு கொன்றனர். அதன்பிறகு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக நம் நாடு பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுத்தது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. விமானப்படை தளம், ராணுவ தளங்களும் சேதமாகின.
தொடரும் ஊடுருவல் முயற்சி
நம் நாட்டின் துல்லிய தாக்குதலில் அலறிய பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும் கூட எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். நம் நாட்டின் ராணுவ வீரர்கள் தொடர்ந்து கண்காணித்து பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் மாஸ்டர் மைண்ட்
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு நம் ராணுவ வீரர்கள் எல்லையில் வேட்டையாடி வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
அதில் ஒருவனின் பெயர் பாகு கான் என்ற சமந்தர் சசா. ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இவன் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு முக்கிய மாஸ்டர் மைண்ட் ஆவான்.
Human GPS என புனைப்பெயர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 1995ம் ஆண்டு முதல் வசித்து வந்த இந்த பாகு கான் பயங்கரவாதிகளை நம் நாட்டுக்குள் நுழைய வழிகாட்டி வந்துள்ளான். நம்நாட்டின் எல்லைக்குள் செல்லும் குறுக்கு வழி மற்றும் அங்குள்ள கண்காணிப்பு பற்றி துல்லியமான தகவல்களை அறிந்து வைத்து இருந்த இவன் 100க்கும் அதிகமான ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டான்.
இதனால் பாகுகானை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ‛Human GPS' என்று அழைத்தனர். இப்போது நம் நாட்டின் ராணுவ வீரர்கள் பாகு கானின் கதையை முடித்துள்ளனர். குரேஸ் செக்டராில் உள்ள நவ்சேரா நார் ஏரியாவில் ஊடுருவ முயன்றபோது அவனது மூச்சை நம் ராணுவ வீரர்கள் நிறுத்தி உள்ளனர்.
ஆபரேஷன் பெயர் என்ன?
தற்போது இந்த ஏரியாவில் நவ்சேரா நார் IV என்ற பெயரில் ஆபரேஷன் நடந்து வருகிறது. ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் நம் ராணுவ வீரர்கள் 2 பயங்கரவாதிகளை கொன்றனர். அதில் ஒருவர் தான் பாகு கான். நீண்டகாலமாக பாகு கானை தீர்த்து கட்ட நம் ராணுவம் முயன்று வந்தது. ஆனால் நூலிழையில் தப்பித்து வந்த நிலையில் தற்போது நம்ராணுவத்தின் துப்பாக்கி குண்டுக்கு அவன் பலியாகி உள்ளான்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications