இன்ஸ்டா ரீலில் முதல் மனைவியை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவன்.. பிளேடால் ‘அந்த’ உறுப்பை வெட்டிய 2வது மனைவி
ஐதராபாத்: இன்ஸ்டாகிராமில் முதல் மனைவி போட்டிருந்த வீடியோவை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவனின் பிறப்பு உறுப்பை இரண்டாவது மனைவி பிளேடால் வெட்டிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
இன்ஸ்டா ரீல்சில் முதல் மனைவியின் வீடியோவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததால் கணவன் மீது கோபம் அடைந்த இரண்டாவது மனைவி, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி வீசிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. வினோதம் கலந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள நந்திக்மா பகுதியை சேர்ந்தவர் கோடா ஆனந்த் பாபு. இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவதாக வரம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் அங்குள்ள முப்பல்லா கிராமத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஆனந்த் பாபுக்கு பொழுது போக்காக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. வீட்டில் இருக்கும் போது அடிக்கடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்து வந்துள்ளார். அப்படித்தான் சம்பவம் நடைபெற்ற அன்று ஆனந்த் பாபு இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டுள்ளர். எந்நேரமும் போனில் என்னதான் பார்ப்பார் என்று அவரது மனைவி வரம்மாவும் கணவரை கவனித்துள்ளார்.
அப்போது, தனது முதல் மனைவி இன்ஸ்டாவில் செய்த ரீல்ஸ் வீடியோவை ஆனந்த் பாபு ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் டென்ஷன் ஆன வரம்மா, ஆனந்த் பாபுவிடம் கேட்டுள்ளார். இதனால், ஆனந்த்பாபுவுக்கு வரம்மாவுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் வீட்டில் இருந்த பிளேடை எடுத்து ஆனந்த் பாபுவின் அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டாராம்.
இதனால் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறிய ஆனந்த பாபுவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்த் பாபுவின் மனைவியிடம் விசாரித்து வருகின்றனர். வரம்மா நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், " எனது கணவரான ஆனந்த் பாபு முதல் மனைவியின் வீடியோவை இன்ஸ்டா ரீல்ஸ்சில் பார்த்ததால் நான் கோபம் அடைந்தேன்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கும் அவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஆனால் வேண்டும் என்றே நான் பிளேடால் அவரை தாக்கவில்லை. விபத்தாக நடைபெற்று விட்டது" என்றார். முதல் மனைவியின் வீடியோவை பார்த்ததால் கோபம் அடைந்த இரண்டாவது மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications