சொல்லச் சொல்லக் கேட்காமல் கள்ள உறவு.. மனைவியைக் கொன்றார் கொத்தனார்
பெங்களூர்: இதோ.. இன்னும் ஒரு கள்ளக்காதல்.. இன்னும் ஒரு கொலை... பெங்களூரில் எத்தனை முறை சொல்லியும் கள்ளக்காதலனோடு சல்லாபம் செய்து வந்த மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார் ஒரு கொத்தனார்.
பெங்களூர் கேஜி ஹள்ளி அருகே நாகவரா பகுதியில் வசித்து வருபவர் இம்தியாஸ். கொத்தனாராக இருக்கிறார். இவரது மனைவி பெயர் ரிஸ்வான் தாஜ். 35 வயதான ரிஸ்வானுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது உடல் ரீதியான பழக்கமாக மாறியது.
இதை அறிந்த இம்தியாஸ் மனைவியைக் கண்டித்தார். தவறை நிறுத்தும்படி கேட்டார். ஆனால் ரிஸ்வான் மறுத்து விட்டார். தொடர்ந்து கள்ளக்காதலனோடு உறவில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்தார் இம்தியாஸ். சம்பவத்தன்று, கூரிய ஆயுதத்தை எடுத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். வலியில் துடித்தார் ரிஸ்வான். ரத்தம் கொட்டக் கொட்ட அவர் உயிருக்குப் போராடினார். இதைப் பார்த்த இம்தியாஸ் தப்பி ஓடி விட்டார்.
சிறிது நேரத்திலேயே ரிஸ்வான் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸார் விசாரணை நடத்தி உடலை மீட்டனர். தற்போது தலைமறைவாகி விட்ட இம்தியாஸைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications