பல ஆண்களுடன் தொடர்பு.. மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்த கணவர்!
மேற்குவங்கத்தில் பாரில் நடனமாடி வந்த மனைவி பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கொல்கத்தா : மேற்குவங்க மாநிலம் உல்காஸ் நகர் பகுதியில் பாரில் நடனமாடிய மனைவிக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கணவர் அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
உல்காஸ் நகரை அடுத்த விதல்வாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கான் என்பவரின் மனைவி ஜமீலா. இவர் அங்குள்ள பார் ஒன்றில் நடனமாடி வந்தார். அப்போது அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை ராஜேஷ் கான் பல முறை கண்டித்தும் ஜமீலா தொடர்பை கைவிடுவதாக தெரியவில்லை.

இதுதொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகாராறில் ஆத்திரமடைந்த ராஜேஷ்கான் ஜமீலாவை சாகும்வரை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து உடலை சூட்கேசில் அடைத்த ராஜேஷ் கான் சடலத்தை மறைக்க அவரது நண்பர் சபிபுல்லாவின் உதவியை நாடியுள்ளார்.
ஆனால் அதிர்ச்சி அடைந்த அவர் உதவி செய்ய மறுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து ராஜேஷ்கானின் வீட்டிற்கு வந்த போலீசார் அவர் வீட்டில் இல்லாததைக் கண்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
அவரது செல்போனை ட்ரேஸ் செய்த போலீசார் அந்த எண் ஹவுராவில் இருந்து அவரது சொந்த ஊரான முர்ஷிதாபாத் செல்லும் வழியில் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் செல்போன் சிக்னலை வைத்து ராஜேஷ்கானை கைது செய்தபோலீசார் அவர் சூட்கேசில் அடைத்து தூக்கிச் சென்ற ஜமீலாவின் உடலையும் கைப்பற்றினர்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications