நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் மூக்கை அறுத்த கணவன்!
லக்னோ: தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் அவரது மூக்கை அறுத்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் நரோதா ஹன்ஸ்ராம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் ரத்தோர். இவரது மனைவியை கம்லேஷ். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட இந்த தம்பதிக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

சமபத்தன்று சஞ்சீவ் வேலை முடிந்து குடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிய பொழுது, கம்லேஷ் வேறு யாரோ ஒரு ஆணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் கம்லேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முடிவில் காமலேஷின் அழகை குலைக்கும் பொருட்டு, தன்னுடைய மனைவியின் மூக்கு நுனியை கத்தியால் அறுத்துவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கம்லேஷின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். சஞ்சீவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications