ஹைதராபாத்தில் சிறுவனை கொன்றது பற்றி விசாரித்த பிறகு ராணுவ வீரர் தன்னை தானே சுட்டு தற்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ராணுவ பகுதியில் 11 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்ட பிறகு ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெஹதிபட்டினத்தில் தனது பெற்றோர், 3 சகோதரர்கள், சகோதரியுடன் வசித்து வந்தவர் செய்யது முஸ்தபா(11). கடந்த 9ம் தேதி அவர் ஹைதராபாத் ராணுவ பகுதியில் மர்மமான முறையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இறப்பதற்கு முன்பு அவர் போலீசாரிடம் கூறுகையில், ராணுவ வீரர்கள் தான் தன்னை எரித்ததாக தெரிவித்தார். ஆனால் சிறுவனை ராணுவத்தினர் யாரும் எரிக்கவில்லை என்று ராணுவம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி கடந்த 4 நாட்களுக்கு முன்பு 5 ராணுவ வீரர்களிடம் சிறப்பு குழு விசாரணை நடத்தியது. அதில் அப்பாலா ராஜு என்ற வீரர் இன்று அதிகாலை 4 மணிக்கு தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
இது பற்றி ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
ராஜுவை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications