ஹைதராபாத்தில் 18 பேரை பலி கொண்ட குண்டு வெடிப்பு வழக்கு.. தீவிரவாதிகள் 5 பேருக்கு மரண தண்டனை
டெல்லி: ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளியான தீவிரவாதி யாசின் பட்கல் மற்றும் கூட்டாளிகள் நால்வருக்கு மரண தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹைதராபாத்தின், தில்சுக்நகர் பகுதியிலுள்ள கோனார்க் மற்றும் வெங்கடாத்திரி தியேட்டர்கள் அருகே 2013, பிப்ரவரி 21ம் தேதி நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 131 பேர் படுகாயமடைந்தனர்.

தேசிய விசாரணை ஏஜென்சி இந்த வழக்கை விசாரித்தது. குற்றப்பத்திரிக்கையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரான கர்நாடகாவை சேர்ந்த யாசின் பட்கலுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறப்பட்டது. தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகவும், கூட்டாளிகள் மேலும் நால்வருக்கும் இதில் தொடர்புள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகளின்போது, இது அரிதிலும் அரிதான சம்பவம் என்ற கணக்கில் விசாரிக்கப்பட வேண்டும் என்று என்.ஐ.ஏ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று யாசின் பட்கல் மற்றும் நால்வருக்கு மரண தண்டனை விதித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
குண்டு வெடிப்பு நடைபெற்ற அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், நேபாள எல்லையில் வைத்து யாசின் பட்கல் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்ட, மிகப்பெரிய தீவிரவாதியான யாசின் பட்கல் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications