”மட்டன் கறி” சமைக்கத் தெரியாத மனைவியை தீவைத்து கொளுத்திய கணவன்- தெலுங்கானாவில்!
கடேடன்: ஹைதராபாத்தில் மனைவிக்கு நாக்குக்கு ருசியாக ஆட்டிறைச்சி செய்யத் தெரியவில்லை என்று கூறி மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்திய குடிகார கணவன் ஒருவன் மனைவியை கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள கடேடன் பகுதியில் வசித்து வருபவன் சங்கர் ராவ். கடந்த 20 ஆம் தேதி குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சங்கருக்கு அவனது மனைவி சுலோச்சனா ஆட்டுக்கறியை பரிமாறியுள்ளார்.

உச்சகட்ட போதையில் இருந்த அந்தக் கொடூரனோ, அது சுவையாக இல்லை என்று கூறி மனைவியை பலமாகத் தாக்கியுள்ளான். இதை சுலோச்சனாவின் அம்மாவும், அவரது சொந்த மகளும் தடுக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் அதற்குள் போதை தலைக்கேறிய அந்த கொடுமைக்கார கணவன் மண்ணெண்ணெயை ஊற்றி தன் மனைவியை எரித்துள்ளான். அக்கம் பக்கத்தினரின் உதவியால் சுலோச்சனா உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக பலியானார். இதனையடுத்து சங்கரைக் கைது செய்துள்ள போலீசார் அவனைக் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications