ஹைதராபாத்தில் பி.இ. மாணவியை பலாத்காரம் செய்து, மிரட்டிய 2 பேர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அவரை மிரட்டியதற்காக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள பொறியில் கல்லூரியில் படித்து வரும் 22 வயது மாணவி தனது காதலருடன் நகருக்கு வெளியே ஆளில்லாத கட்டிடத்தில் இருந்துள்ளார். அவர்கள் ஒன்றாக இருப்பதை 2 பேர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்ததுடன், புகைப்படமும் எடுத்தனர்.

அந்த இருவரும் அந்த வீட்டுக்குள் நுழைந்து வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று காதல் ஜோடியை மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த இருவரும் மாணவியின் காதலரை அடித்து விரட்டினர். காதலர் ஓடியபிறகு அந்த இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து மாணவி வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த இருவரும் அவருக்கு போன் செய்து நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் மாணவி போலீசாரிடம் நடந்ததை தெரிவித்து அந்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி மாணவியை பலாத்காரம் செய்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அந்த இருவரும் இதே போன்ற குற்றங்களை ஏற்கனவே செய்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications