ஒரு மணி நேரத்தில் 1800 செல்பிக்கள்- கின்னஸ் சாதனை படைக்கப் போகும் ஹைதராபாத் இளைஞர்!
ஹைதராபாத்: ஆண்களாலும் செல்பி சிறப்பாக எடுக்க முடியும் என்று கூறியுள்ளார் செல்பியில் சாதனை படைக்க காத்திருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த பானு பிரகாஷ் ரச்சா.
இவர் ஒரு மணி நேரத்தில் 1449 செல்பி எடுத்து சாதனை படைத்த பாட்ரிக் பீட்டர்சனின் கின்னஸ் சாதனையை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முறியடிக்க உள்ளார். ஒரு மணி நேரத்தில் 1800 செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைப்பேன் என இவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் வேலை முடித்து விட்டு பஸ்சில் சென்று கொண்டிருந்த பானு பிரகாஷ் மூன்று நிமிடத்தில் 105 செல்பி எடுத்து சாதனை படைத்த ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் சாதனை குறித்து அறிந்தார்.

ஆண் நடிகரின் சாதனை:
" ஒரு ஆண் செல்பி எடுத்து சாதனை படைத்துள்ளார். செல்பி எடுப்பது என்பது பெண்களின் வேலை என பலரும் கருதிக்கொண்டிருந்த நிலையில் நடிகர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இது என்னை செல்பியில் சாதனை படைக்கலாம் என்று தூண்டியது" என்கிறார் பானு பிரகாஷ். இதன் பின்னர் வேலைக்கு சென்ற போது சக ஊழியருடன் சேர்ந்து மூன்று நிமிடத்தில் 120 செல்பி எடுத்துள்ளார்.
கின்னஸுக்கு விண்ணப்பம்:
இதன் பின்னர் செல்பி எடுப்பதில் சாதனை படைத்தவர்கள் குறித்து தேடத் துவங்கினார். அதில் பாட்ரிக் பீட்டர்சன் என்பவர் ஒரு மணி நேரத்தில் 1449 செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதை அறிந்தார். இதன் பின்னர் அடுத்த 20 நாளில் தானும் கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்து கின்னஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் அனுப்பினார். இதனை கின்னஸ் நிறுவனம் சமீபத்தில் ஏற்றுக்கொண்டது.
வேலையை விட்டு பயிற்சி:
கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பயிற்சி செய்து வருகிறார். பானு பிரகாஷ் சாதனை படைப்பது குறித்து கூறுகையில், "தற்போது சாதனை படைக்க வேண்டும் என்பதை மட்டும் இலக்காக வைத்துள்ளேன். இதற்காக கடந்த ஐந்து மாதமாக பயிற்சி எடுத்து வருகிறேன். எனது விண்ணப்பம் ஏற்கப்பட்டது என்பது குறித்து அறிந்தவுடன் எனது வேலையை துறந்தேன். எனது வேலை நேரம் காலை பத்து மணி முதல் மாலை 6 மணி வரை. வேலையை ராஜினாமா செய்துவிட்டதால் பயிற்சி எடுக்க போதுமான நேரம் கிடைக்கிறது" என கூறினார்.
கேமராவுடனான செல்போன்:
கடந்த மூன்று வருடத்திற்கு முன்னர் அவரது சகோதரர், பிறந்த நாள் பரிசாக முன்பக்கம் கேமராவுடன் கூடிய செல்போன் வாங்கி கொடுத்தபோது, பானு பிரகாஷூக்கு செல்பி எடுக்கும் எண்ணம் தோன்றியது.
முதல் வேலையாக புகைப்படம்:
"போன் கிடைத்ததும் முதலில் புகைப்படம்தான் எடுத்தேன். அப்போது செல்பி இங்கு பிரபலம் ஆகவில்லை. காலை எழுந்ததும் முதல் வேலையாக புகைப்படம் எடுத்தேன் " என்கிறார் பானு பிரகாஷ் ரச்சா.
1800 கன்பார்ம்:
செல்பி எடுப்பதற்காக தனது கை மற்றும் மணிக்கட்டிற்கு உரிய பயிற்சி எடுத்து வருகிறார். " எனது வலது கையை பயன்படுத்தி செல்பி எடுத்து வருகிறேன். இதற்காக எனது கை மற்றும் முழங்கைக்கு உரிய பயிற்சி எடுத்து வருகிறேன்" என்கிறார் பானு பிரகாஷ். அருகில் உள்ள பள்ளியில் பயிற்சி எடுத்து வரும் அவர், மாணவர்களுடன் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் 1700 செல்பி எடுத்து வருகிறார். இன்னும் சில நாட்களில் ஒரு மணி நேரத்தில் 1800 செல்பி எடுத்து சாதனை படைப்டேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications