ரேனிகுண்டாவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் விபத்து.. பயணிகளுக்கு உயிர் பாதிப்பில்லை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ரேனிகுண்டா விமான நிலையத்தில் ஸ்பெஸ்ஜெட் விமானம் தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமானத்தின் டயர் மண்ணில் சிக்கி நின்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்.ஜி.1047 என்ற விமானம் ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி சென்றது.

அந்த விமானம் ரேனிகுண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டது. ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருந்ததை கவனிக்காமல், விமானி தரையிறக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், 70க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications