மோடி குறித்த 'பில்டப்'புகள் நீர்க்குமிழி போல.. சீக்கிரம் உடைந்து விடும்- சிபல்

Subscribe to Oneindia Tamil

Hype around Narendra Modi a bubble that will burst soon: Kapil Sibal
டெல்லி: நரேந்திர மோடி குறித்த பில்ட் பேச்சுக்கள் அத்தனையும் நீர்க்குமிழி போல.. சீக்கிரமே இவை உடைந்து விடும் என்று கூறியுள்ளார் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நரேந்திர மோடி குறித்து ஏகப்பட்ட பில்டப் பேச்சுக்கள் சுற்றி வருகின்றன. ஆனால் அத்தனையும் நீர்க்குமிழி போல. சீக்கிரமே இவை உடைந்து விடும்.

குஜராத் குறித்து தொடர்ந்து புனைக் கதைகளையே அவர் பரப்பி வருகிறார். அது மட்டுமல்லாமல், இன்டர்நெட்டிலும் தவறான தகவல்களால் அவர் நிரப்பி வருகிறார்.

இயற்கையின் விதி என்னவென்றால் எது ஒன்று மேலே செல்கிறதோ அது நிச்சயம் கீழே வரும். அதேசமயம், எது ஒன்று வேகமாக மேலே செல்கிறதோ, அதே வேகத்தில் அது கீழே வரும். மோடி விவகாரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் அவரைச் சுற்றிலும் நீர்க்குமிழிகள்தான் இப்போது சூழ்ந்து நிற்கின்றன. அத்தனையும் கட்டாயம் சீக்கிரமே உடைந்து போகும்.

குஜராத் மாடல் என்று பேசுகிறார்கள். அப்படி என்றால் என்ன என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. இல்லாத ஒரு பொருளை நீங்கள் எப்படி விற்க முடியும்... அப்படித்தான் குஜராத் மாடலும் என்றார் சிபல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+