பீகார் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் இந்தியாவை மோடி இழந்துவிடுவார்: நிதீஷ்குமார் எச்சரிக்கை
பாட்னா: பீகார் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பில் பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவையே இழந்துவிட வாய்ப்புள்ளது என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எச்சரித்துள்ளார்.
பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திரமோடி, ஒரு கூட்டத்தில் பேசும்போது, "2005, ஆகஸ்ட் 24ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிதீஷ்குமார், ஒரு குறிப்பிட்ட மத பிரிவினருக்கு (முஸ்லிம்கள்) இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் இருந்து 5 சதவீதத்தை பறித்து, அந்த ஒரு குறிப்பிட்ட மத பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்ற ஆசையை நிதீஷ் வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில் நிதீஷ்குமார் வெளியிட்டுள்ள டிவிட்டில் "மோடியின் பிரிவினைவாத பேச்சால் ஆச்சரியம் அடைந்தேன். பீகாரில் தோல்வி முனையிலுள்ள மோடி, வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தியாவையே இழந்துவிடுவார் என நான் அஞ்சுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
பீகார் முசாபர்பூர் மருத்துவமனையில் அதிகாலை தீ விபத்து.. 10 பேர் பலி.. ICU-வில் நடந்த கொடூரம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications