நான் கறி சாப்பிடுவேனே.. வெங்கையா நாயுடு!
உணவுப் பழக்கம் வழக்கம் என்பது தனி நபர் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி: உணவுப் பழக்கம் வழக்கம் என்பது தனி நபர் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் நானும் ஒரு அசைவ பிரியர் தான் என்றும் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து களைக்கட்டியது.

வெங்கய்யா பதிலடி
நாட்டு மக்கள் அனைவரையும் மத்திய அரசு சைவமாக்க பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பதிலடி கொடுத்துள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அடிப்படை ஆதாரமற்றவை
பா.ஜ.க மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் கூறினார். உணவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன என்றும் வெங்கய்யா நாயுடு குற்றம்சாட்டினார்.

நானும் நான் வெஜ்தான்
என்ன வகையான உணவை உண்ண வேண்டும் என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்தது என்றும் அவர் கூறினார். இன்று வரை தனக்கு அசைவ உணவுப் பழக்கமே உள்ளது என்று கூறிய அவர் இதையெல்லாம் ஒரு பிரச்னையாக்கி செயல்படக் கூடாது என்றார்.

என்னை எப்படி?
மேலும், பா.ஜ.க அனைவரையும் சைவமாக மாற்றப் பார்க்கிறது என்றால், அசைவம் சாப்பிடும் என்னை மாநில பா.ஜ.க தலைவராக எப்படி வைத்திருக்க முடியும் என்றும் அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications