For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய அளவிலும் இப்படி கூட்டணி உருவாகும்.. பாஜகவை வெளியேற்றுவோம்.. சித்தராமையா அழைப்பு

கர்நாடகா மாநிலத்தில் அமையவிருக்கும் கூட்டணி ஆட்சி போல தேசிய அளவில் அடுத்த வருடம் மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையுள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் அமையவிருக்கும் கூட்டணி ஆட்சி போல தேசிய அளவில் அடுத்த வருடம் மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையுள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஜனநாயகம்

சித்தராமையா தனது முதல் டிவிட்டில் ''கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுவிட்டது. இது மக்களின் வெற்றி. இது நமது அரசியலமைப்பின் வெற்றி. உண்மையின் பாதையில் இருந்த காங்கிரஸ், மஜத உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றுள்ளார்.

அம்பலம்

மேலும் ''இன்று மோடியின் அரசியல் மக்களுக்கு அம்பலமாகியுள்ளது. இந்தியாவின் ஹிட்லர்- கோயபல்ஸ் ஜோடியின் உதவி இல்லாமல் கர்நாடகா பாஜகவால் குதிரை பேரத்தில் ஈடுபட முடியவில்லை என்பது தெளிவாகியுள்ளது'' என்று மோடி அமித் ஷா குறித்து டிவிட் செய்துள்ளார்.

எல்லோருக்கும் நன்றி

மேலும் ''காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், குலாம்நபி ஆசாத், அசோக் கோஹ்லேட் எல்லோரின் வழிக்காட்டுதலுக்கும், ஆதரவிற்கும் நன்றி. டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அணிக்கும் நன்றி. அதேபோல் நீதிமன்றம், ஊடகத்துறை எல்லோருக்கும் மிக்க நன்றி'' என்றுள்ளார்.

தேசிய அளவில் கூட்டணி

கடைசியாக ''இன்று கர்நாடகா இந்த ஜனநாயகத்தை காப்பற்றியுள்ளது. பாஜகவின் ஊழலான ஜனநாயகமற்ற அரசியல் வெளியேற்றியுள்ளோம். மதசார்பற்ற கட்சிகள் தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்கும் அடித்தளமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.'' என்றுள்ளார்.

English summary
Today, Karnataka has safeguarded democracy! We have ousted the BJP’s corrupt & unconstitutional politics. I am confident that this is the start towards building a National Alliance of progressive & secular forces for 2019, tweets Siddaramaiah on Karnataka political change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X