எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை, ஆகும் என்ற நம்பிக்கையும் இல்லை.. உமா பாரதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. எதிர்காலத்தில் அது நடக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை என்று 56 வயதான மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.
இன்று லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உமாபாரதியை பேச அழைத்தபோது திருமதி உமா பாரதி என்று தவறுதலாக அழைத்து விட்டார்.

இதையடுத்து உடனடியாக எழுந்த உமா பாரதி சிரித்தபடி, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. எதிர்காலத்தில் அது நடக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இங்கு நோ வேகன்ஸி என்று கூறவே அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதையடுத்து சிரித்தபடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமா பாரதி ஒரு துறவி ஆவார். அவரை பெரும்பாலும் சாத்வி என்றுதான் அனைவரும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications